[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 02:36.35 AM GMT ]
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய கடல் வழியாக ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகிய போதைப் பொருட்கள் தலைமன்னாருக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.
தலைமன்னாரியிலிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இவ்வாறு கொண்டு வரப்பட்டு கொழும்பிற்கு விநியோகம் செய்யப்படவிருந்த நிலையில் போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மதவச்சி கெபதிகொல்லா பிரதேசத்தில் வைத்து இந்த போதைப் பொருட்களும் அவற்றை எடுத்துச் சென்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ராஜ் ராஜரட்னத்தின் சகோதரர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 03:10.26 AM GMT ]
அமெரிக்க பங்கு வர்த்கத்தில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள இலங்கையரான ராஜ் ராஜரட்ணத்தின் சகோதரர், ரெங்கன் ராஜரட்ணம், அமெரிக்கா அரசாங்க அதிகரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ராஜ் ராஜரட்ணத்துடன் இணைந்து ரெங்கன் ராஜரட்ணமும் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க பொலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அவரது வழக்கு இந்த மாத முதல் பகுதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. எனினும் வழக்கிற்கு முன்னதாக அமெரிக்காவின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, ரெங்கன் ராஜரட்ணம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கு நீதிமன்றமும் அனுமதித்துள்ளதைத் தொடர்ந்து இன்றைய தினம் அவர்களுக்கு இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளைக் கொண்டு உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு அவர் 1.3 பில்லியன் டொலர்களை லாபமாக பெற்றிருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten