தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

உண்மை என்பது ஊமை தானா? - (மரணத்தின் அழைப்பிதழ் 3 - பூநகரான்)


உள்ளம் என்பது ஆமை...அதில் உண்மை என்பது ஊமை என்றான் கண்ணதாசன். இதன் பொருள், உள்ளத்து உண்மைகள் ஆமைகளின் கால்களைப் போல், உள்ளே முடங்கிக் கிடந்தாலும்.....
...நிரந்தரமாகத் தூங்கி விடுவதில்லை என்பதோடு, சூழ்நிலைகள் சரியாக அமையும் போது காலம் தாழ்த்தியாவது நாட்பட, நாட்பட ஆமைக்கால்கள் போல உண்மைகள் வெளிவரும் என நாம் பொருள் கொள்ள இயலும்.
இந்த 'இடம், நேரம், காலம் என்பதிலும் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை என்ற பொருள்பட இரண்டு தடவை வருகிறது. ஆகவே காரியம் எண்ணித் துணியப்பட்டாலும, கள நிலை இருபுற வலிமைகளையும் அறிந்து, மாற்றான் துணை மற்றும் பின்புல பலமறிந்து, ஆபத்தற்ற பொருத்தமான , நேரத்திலேயே கருமங்கள் ஆற்றப்படவேண்டும்...அதாவது உண்மையை வெளியிடுவது அடங்கலாக என எழுத வேண்டிய அளவிற்கு கலியுகத்தில் அனேகமான நாடுகளில் நிலை அபாயமாகவே உள்ளது.
ஜனநாயகம் என்பதே ஒப்பீட்டளவில் தான் சிறந்தது என்றார் வின்சன்ட் சேர்ச்சில். அதிலும் இந்;தியாவில் உள்ள அதிகாரமற்ற சமஷ்டி கட்டமைப்பு ஜனநாயக வீச்சத்தற்கும் விழுமியத்திற்கும் குந்தகமானது என்பது ஒரு பகிரங்க இரகசியமாகும்.
13 பிளஸ் என்பது அதை விட..... என்பதோடு அப்பலோ 13 சந்திரனை சென்றடையாது திரும்பியதே ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது 'ஜனநாயகம் என்பது ஒரு சிறந்த ஆட்சி முறை அல்ல. ஆனால் ஏனைய ஆட்சி ரூபங்கள் அதை விட மிகவும் மோசமானவையாக இருப்பதால் தான, வேறு மார்க்கமின்றி ஜனநாயகம் கைக்கொள்ளப்படுகின்றது என்பதே அவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்றின் சாரமாகும்.
இதற்கும் அப்பால், ஜனநாயக தேர்தலில், கண்ணியமற்ற தலைமைகள் தலையற்றவர்களால் தெரிவு செய்யப்படவும் வாய்ப்புண்டு என்ற பொருளிலும் பழமொழிகள் உண்டு. எனவே ஜனநாயகம் என்பது ஜனநாயகமாக வேண்டுமாயின் அது கவனமாகவும் , நேர்மையாகவும் கையாளப்பட வேண்டுமென்பது தெளிவாவதுடன் அவசியமுமாகின்றது.
இந்தக் கோணத்தில் சர்வதேசம் கொழும்பைப் பார்க்க தூண்டும் பணி புலம்பெயரந்தவர்களிடம் தான் இருக்கிறது என நான் நம்புகிறேன். ஆனால், நாங்களோ செய்ய வேண்டியதும், செய்யக் கூடியதுமான காரியங்களை விட்டு ஆழமற்று கோஜங்களை மட்டும் எழுப்புகிறோமா? தமிழக மாணவ மணிகளின் போராட்டத்திற்கு என்ன நடந்தது?.....நிற்க!
இது இப்படியிருக்கும் போது, தேர்தல்களை போர் வெற்றியும் வெறியும் ஓயமுன், முன் கூட்டியே தேர்தலை நடாத்தி ஜனநாயக முலாம் பூசி ஜொலிக்கும் நாடுகளும் உள்ளன. 'காங்கிரஸ் இந்தியாவிற்கு' வெளியே, சுதந்திர இந்தியாவில், அமரர் மொரார்ஜி தேசாயையும் விட, மதிப்பிற்குரிய பிரதமராக இருந்த திரு வாஜ்பாய் அவர்கள் கூட, ஜனநாயகக் கணக்கை மீறி, அரச மரக் கிளை சங்கமித்தை சந்திரிகாவிற்கு தேர்தல் திகதியை மாற்றுமாறு ஆலோசனை வழங்கியவர் தான்.
அதாவது, தேர்தலை தள்ளிப் போடுவது எவ்வளவு ஜனநாயக விரோதமானதோ, அவ்வாறே தேர்தலை முன் கூட்டியே நடாத்துவதும் ஜனநாயக மோசடியாகும். இதையே நவலங்கா சிறீமாவோவின் குடியரசின் பின் தொடர்கிறது.
ஆனால் வடக்கின் தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தலை தடுக்க, ஜனநாயகத்தின் இன்னொரு வடிவமான போராட்டத்தை நடாத்தும் விநோதங்களை பூமிப் பந்தின் கவனத்திற்கு கொண்டு வர ' சர்வதேச மட்டத்தில் ' தமிழ் ஊடகவியலாளர்கள் யாருமே இல்லை. இவ்வாறான காரியங்கள் ஆற்றப்பட வேண்டுமே என்பதை உணர்ந்து புலம்பெயர் தமிழர் அதற்கு இசைவான அமைப்புக்களையும் அமைக்க முயலவும் இல்லை.
பெரிய திரை “ராதிகா” சின்னத்திரையில் தனது சாவித்திரி வெற்றிலை விரிச்ச முகத்தை காட்டுகையில், கனேடியத் தமிழராகிய நாம், கையில் வெண்ணையை வீணாக்கி வருகிறோமா என்பதை தெளிவாக சிந்திக்க வல்ல அரசியல் சமூக மூலகங்களிடம் விட்டு விடுகிறேன்.விளங்க முயலாத முயலாமைகளிற்கு எத்தனை தடவை எழுதியும் பலன் கிட்டாது.
ஆக வடக்கின் தேர்தல் என்பது, 29, 2012 திகதிய கனடா உதயனின் 170 வது பார்வையில் எழுதப்பட்டதைப் போல், வடக்கில் சிங்களக் குடியேற்றத்தை முடித்த பின்னரே அங்கு தேர்தல் நடாத்தபடக் கூடும். எனவே இவ்வாறான பரப்புரைகளை மிதவாத ஜனநாயக அமைப்புக்களினூடாக வெளிக் கொண்டு வருவுதே புலம்பெயர்ந்தவரின் பொறுப்பாக இயலும். நிற்க!.
இருந்தாலும் தேர்தல்களை தொடர்ச்சியாக ஒழுங்காக நடாத்தாத மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான் இரண்டிற்கும் நடுவே பாரதம் பாருக்குள்ளே சிறந்த ஜனநாயக நாடாகக் கருதப்படுகிறதே ஒழிய இது சரியான கணிப்பல்ல என்பதை நான் எழுத வேண்டியதில்லை. இருந்தாலும் உண்மை பஸ்சிற்கு காத்து நிற்கையில் பொய் உலகத்தை மயிலேறு பெருமான் போல விரைந்து பறந்து சுற்றி வந்து விடும் என்பதும் இன்னொரு பழமொழியாகும்.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸிற்கு என்ன நடந்தது? அவர் எப்படி மரணமானார் என்பது மர்மமாக துலங்காமல் இன்னமும் உள்ளதைப் போல, திரு ராஜீவ் காந்தி அவர்களின் மறைப்பின் பின்னணியும் வெளிவராமலேயே உள்ளன.
மிக நீண்ட காலத்திற்குப் பிற்பாடு, அமரர் சுபாஷ் சந்திரபோஜிற்கு கௌரவம் வழங்க ' காங்கிரஸ் இந்தியா முன் வந்த போது, மேற்கு ஜேர்மனியில் இருந்த நேதாஜியின் மகள், அதனை ஏற்க மறுத்துவிட்டார். நேதாஜியின் வீரத்தையும் தியாகத்தையும், சர்வதேச மட்டத்திலான உலகப் போர் கால இராஜதந்திர நகர்வுகளை இனஙகாணவும் புரியவும் பாராட்டவும் டெல்லிக்கு இவ்வளவு காலம் தேவையா என்றும் அவர் கேட்டிருந்தார்.
இவ்வாறான வரலாற்று ரீதியிலான தமிழர் சார்பு நிலைக்கு சாதகமானவர்களை எல்லாம் புலம்பெயரந்த தமிழர் கண்டு கொள்வதேயில்லை. காரணம் ராஜீக மட்டத்தில் மட்டுமன்றி அரசியலிற்கும் வரமாட்டோம் என அவர்கள் போராட்ட வட்டத்திற்குள்ளே மட்டும் நிற்பது இன ஆய்விற்குரியது. நிற்க!
மீண்டும் ராஜீவ் மறைவு வழக்கிற்கு வந்தால், இது தொடர்பான சர்ச்சைகளை மத்திய அரசும் நீதித்துறையும் வலிந்து கவனத்திற்கு எடுத்திருக்க வேண்டும். இருந்தாலும் தற்போது தமிழகத்தில் எழுப்பப்பட்டுள்ள சந்தேகங்களின் அடிப்படையில் இந்திய சட்டத்திற்கு உட்பட்டு உண்மையை நிலை நிறுத்துவதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் பல்வேறு வழிகளிலும் உதவ வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கு நடந்த காலத்தில் எதையும் செய்யாதிருந்து உண்மையை மறைய விட்டதைப் போல் இந்த வாய்ப்பையும் கவிடாது உறங்கும் உண்மைகளை துலங்க வைக்க ஒரே தமிழ் பாராளுமன்ற உறுப்பினரின் வழி நடாத்தலின் கீழ் அனைத்து அமைப்புக்களும் செயற்பட்டால் என்ன என்பதே இன்றைய கேள்வியாகும்.
கனடாவின் சினிமாஸ்கோப்பில் உள்ள கௌரவ ராதிகாவை நாங்கள் பயன்படுத்தவே மாட்டோமா? ஆதற்கு விட முடியாது என ஒரு குழு உள்ளதா? பேசவும் முடியாதா? எழுதவும் முடியாதா?
அமரர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கையும், அது விசாரிக்கப்பட்ட முறையையும், தீர்ப்பையும் தவறு என்றில்லாவிட்டாலும் முறையானது என்று பேசாமலிருந்து விட முடியாது. இதனை நிர்வாகமே செய்திருக்க வேண்டும்.
இவ்வாறான ஒரு நிகழ்வை டாக்டர் மன்மோகன் சிங் என்ற அப்பாவி மனிதரின் ஆட்சியில், அதை விட தயங்காது எந்த உண்மையையும் மறைத்து பேசும் துணிவுள்ள முதற்குடி மகனின் காலத்திலும் எதிர்பார்க்க இயலுமா?
இது பறைசாற்றும் பணிகளை விட நீதி கேட்டெழ வேண்டிய கண்ணகி காலமாகும். நீதியும் உண்மைகளும் வெளிவரும் போது தடைகளும் தப்பபிப்பிராயங்களும் தடுமாறிப் போகும்.
மேலே உள்ள படம் ஒரு தாக்குதல் முயற்சியைக் காட்டும் சாட்சியாகும். இங்கு விசாரனைகளும் தீர்ப்புக்களும் தண்டனைகளும் ஒழுங்காக முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டனவா?
ஆனால் கருணை வழங்கவல்ல இந்தியாவின் ஜனாதிபதி இந்த முறைகேடான வழக்கின் முடிவை உறுதி செய்து கருணை மனுவை மறுதலிப்பது அந்த ஆசனத்தின் மகிமையையும் களங்கப்படுத்தும் கைங்கரியமாகும்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிப் போகலாம் ஆனால் ஒரு நிரபராதி கூடத் தவறுதலாகவோ அதிகமாகவோ தணடடிக்கப்பட்டு விடக் கூடாது. இது திரு பிரணாப் முகர்ஜிக்கு தெரியாதோ அல்லது தெரிந்தும் ...... பொய் சொன்தைப்போல் கொடுமையை அங்கீகரித்து துரிதப்படுத்துகிறாரோ தெரியவில்லை.
நமக்கென்ன நாங்கள் எதையும் செய்யாது தூங்குவோம் .... அவர்கள் மூவரும் தூங்கட்டும்.......... தூக்கில் ..... என்று பேசாமல் விட்டு விட்டு நாங்கள் ஈழக் கனவு காண தொடர்ந்து தூங்குவோம்.
ஏனென்றால் நாங்கள் இன நலன் கருதாத சுய நலவாதிகள் .... தேவை உலக அரச தளத்திலான ராஜீக மட்டச் சிந்தனை.
அதற்கு தயாரானவர்களை அடுத்த வாரம் சந்திப்போம்.
கோஜம் எழுப்ப மட்டும் கூடிவிட்டி கலைபவர்கள் பற்றி இந்தப் பக்கம் கவனிப்பதில்லை.
நன்றி வணக்கம்.
kuha9@rogers.com

Geen opmerkingen:

Een reactie posten