தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 juni 2013

1983ல் கொழும்பில் நடந்தது நேற்று லண்டனில் நடந்தது !



1983ம் ஆண்டு ஜூலைக் கலவரத்தை நாம் மறந்திருக்க முடியாது. அன்று கொழும்பில் நடந்தது இன்று லண்டனில் நடந்துள்ளது. ஆனால் அதற்கு மேலும் ஒன்றி நடந்துள்ளது அது என்ன தெரியுமா ? நேற்றைய தினம்(20) சிங்களவர்கள் தம் அடையாளங்களை அழித்து விட்டு மைதானத்தில் இருந்து வெளியே சென்றது தான் ! என்ன புரியவில்லையா ?

1983 ஜூலைக் கலவரங்களில் சிங்களவர்கள் தமிழர்களை தாக்கினார்கள். உடைகளைக் களைந்து தமிழர்களை நிர்வாணமாக்கி காலால் எட்டி உதைத்தார்கள். அதனையே சரியாக 30 வருடம் கழித்து 2013 ல் செய்தும் இருக்கிறார்கள். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே அது இலகுவாகப் புரிந்துவிடும். 83 கலவரங்களில் தமது உயிரைக்காக்க தமிழ்ப் பெண்களை பொட்டை அழித்தார்கள், தாலியைக் களற்றி வைத்தார்கள். ஏன் சேலையைக் களற்றி கவுன் போட்டார்கள். ஆண்கள் தமது நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்தார்கள், சாரத்தை உடுத்திக்கொண்டு சிங்களவர்கள் போல தம்மை காட்டிக்கொண்டார்கள். அப்படி என்றால் தான், தப்ப முடியும் என்ற நிலை அன்று இருந்தது. 

இதேபோலவே கடந்த 18ம் திகதியும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியது போதாது என்று, தமிழ் பெண் ஒருவர் மீது சிங்களக் காடையர்கள் எட்டி காலால் உதைந்தார்கள். ஆனால் பிரித்தானியத் தமிழர்கள் அதற்கு இடம்கொடுக்கவில்லை. 2 தினங்களில் தமது பதில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார்கள். நேற்றைய தினம்(20) காடிஃப் மைதானத்தை சூழ்ந்துகொண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பார்த்து, சிங்களம் வெருண்டு ஓடியது. முகத்தில் ஸ்ரீலங்கா கொடிப் படம் கீறிவந்தவர்கள் அந்த அடையாளங்களை அழித்தார்க. கொடியுடன் வந்தவர்கள் அக் கொடியை மறைத்துக்கொண்டார்கள். சிலர் ஸ்ரீலங்கா தொப்பி போட்டுக்கொண்டு வந்தார்கள், அவர்கள் அதனை உடனே களற்றி தமது பாக்கெட்டில் வைத்துவிட்டார்கள். அன்று தமிழர்கள் பயந்து தமது அடையாளங்களை அழித்தது போல இன்று சிங்களவர் தமது அடையாளங்களை அழித்துள்ளார்கள்.

இது ஒன்றுபட்ட பிரித்தானியத் தமிழர்களின் பாரிய வெற்றியாகும். சில வேற்றின மக்கள் இலங்கைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா கொடியைப் வைத்திருந்தார்கள். அவர்களை அணுகிய பொலிசார் இலங்கை கொடிகளை அகற்றுமாறு கூறினார்கள். இதனால் ஸ்ரீலங்கா கொடி அனைத்து இடங்களில் இருந்தும் அகற்றப்பட்டது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் பாரிய தோல்வியை ஸ்ரீலங்கா தழுவிக்கொள்ள தமிழர்களின் போராட்டமும் ஒரு காரணமாக அமைந்தது. ஏன் எனில் தமிழர்கள் காடிஃபில் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளார்கள் என்று சிங்களவர்கள் தமக்குள் தாமே குறுஞ்செய்திகளை() அனுப்பியும் மற்றும் பேஃஸ்புக் ஊடாகவும் செய்திகளை பரிமாறிக்கொண்டார்கள். இதனால் இலங்கை அணிக்கு உச்சாகமூட்ட குறைந்த அளவிலான சிங்களவர்களே வந்திருந்தார்கள். பின்னர் அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறுவதே பெரும் பாடாப் போய்விட்டது. 

"திருப்பி அடி" என்று அதிர்வு இணையத்தால் இப் போராட்டத்துக்கு பெயர் இடப்பட்டது. அதுபோல "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது". எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். (நாம் சொல்லவில்லை: பகவத்கீதை சொல்கிறது)

Geen opmerkingen:

Een reactie posten