தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 juni 2013

கே.பியை கைதுசெய்த அரசுக்கு பிரகீத் எக்னெலிகொடவை கைதுசெய்ய முடியாதா ?

இலங்கையில் காணாமல்போன பல ஊடகவியலாளர்கள், பின்னர் சடலமாகவே மீட்க்கப்பட்டுள்ளார்கள். இதே வரிசையில் இலங்கையில் காணமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகும். ஆனால் இவர் தற்சமயம் பிரான்ஸ் நாட்டில் தனது மனைவியுடன் வசித்துவருவதாக நேற்றைய தினம் பாராளுமன்றில், அனுருத்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவர் மகிந்த ராஜபக்ஷவின் கட்சியைச் சார்ந்த எம்.பி என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இக் கூற்றுக்கள் மிகவும் பாரதூரமானவை என ஐக்கிய தேசிய கட்சி இன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இப்படியான ஒரு கருத்தை அனுருத்திக பெர்னாண்டோ பாராளமன்றத்தில் தெரிவித்திருப்பது, அவைக் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. எனவே இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அனுருத்திக பெர்னாண்டோ உடனடியாக விசாரித்து, பிரான்ஸ் நாட்டில் பிரகீத் எக்னெலிகொட எங்கே இருக்கிறார் என்பதனைக் கண்டறியவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எந்த வெளிநாடுகளில் இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எல்லாம் அறியும் இலங்கை அரசு, பிரகீத் எக்னெலிகொட எங்கிருக்கிறார் என்று அறியமுடியாமல் இருக்கிறதா ? புலிகளின் ஆயுத வினியோகஸ்தர் கே.பியை கைதுசெய்த இலங்கை புலனாய்வுத் துறையால் பிரகீத் எக்னெலிகொடவைக் கைதுசெய்ய முடியாதா ? பிரான்சில் தான் இருக்கிறார் என்றால், பிரான் அரசிடம் முறைப்படி இலங்கை அரசு விண்ணப்பிக்கலாமே ? இவை அனைத்தும் மிகவும் மர்மமாகவே உள்ளது. உண்மையில் பிரகீத் எக்னெலிகொட பிரான்சில் வசித்துவருகிறார் என்றால், இதற்கும் கோட்டபாயவுக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கும் என்பதனை அடித்துக் கூறலாம். பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி , பின்னர் மிரட்டி நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி இருப்பார் கோட்டபாய என்ற ஊகத்துக்குக் கூட இடமுண்டு.

எது எவ்வாறாயினும், பிரகீத் எக்னெலிகொட இலங்கையில் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்று பலரும் நம்பும் நிலையில் இச் செய்தியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகும் !


Geen opmerkingen:

Een reactie posten