[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 03:01.23 AM GMT ]
எதிர்காலத்தில் நாடு பிளவடையாது ஐக்கியத்தை கட்டிக்காக்கவே திருத்தங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்கள் என்ன சொன்னாலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் எதனைப் பரிந்துரை செய்தாலும், நான் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்.
எதிர்காலத்தில் பதவியேற்கும் எந்தவொரு ஜனாதிபதியினாலும் நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் சட்டத் திருத்தங்களை செய்யவே விரும்புகின்றேன்.
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விளக்கத்தை அளித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவிற்கு இரகசிய கடிதம் எழுதினார் சம்பந்தன்: சிங்களப் பத்திரிகை
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 03:07.33 AM GMT ]
13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென 26 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரகசியமான முறையில் இந்தியாவிற்கு கடிதமென்றை அனுப்பி வைத்ததாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாணசபை முறைமை முழுமையாக மாற்றியமைக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த இரகசிய கடிதத்தில் அமிர்தலிங்கம் மற்றும் சிவிசிதம்பரம் ஆகிய தமிழ்த் தலைவர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பான உத்தேச யோசனைத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதனை தடுக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
இந்த இரகசியக் கடிதத்தின் பிரதியொன்று அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக திவயின செய்தி வெhttp://www.tamilwin.net/show-RUmryGSaNcgv5.htmlளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten