தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 juni 2013

பிரித்தானியா வர 3,000 பவுண்டுகள் பிணைப் பணம் செலுத்தவேண்டும் !

சில வெளிநாட்டவர்கள் பிரித்தானியா வருவதற்கு , அன் நாட்டவர்கள் 3,000 பவுண்டுகளை பிணைப் பணமாகச் செலுத்தவேண்டிய நிலை தோன்றியுள்ளது. பிரித்தானியாவுக்கு விசா விண்ணப்பிப்பவர்கள் இனி 3,000 பவுண்டுகளை பிணைப் பணமாக அன் நாட்டு தூதரகத்தில் செலுத்தவேண்டும். பின்னரே அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக பிரித்தானியாவுக்கு விசா பெற்றுச் செல்பவர்கள் அன் நாட்டில் அரசியல் தஞ்சம் கோருகிறார்கள். இதன் காரணமாகவே இந்த 3,000 பவுண்டுகள் பிணைப் பணம் அறவிடும் முறை ஆரம்பிக்கப்படவுள்ளது என பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது. 

ஆபிரிக்காவில் 6 நாடுகளும் ஆசியாவில் பல நாடுகளும் இப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நாடுகளில் வசிப்பவர்கள் இனி பிரித்தானியா செல்ல விசா விண்ணப்பிக்கும்போது இந்த பிணைப் பணத்தை செலுத்தவேண்டும். அதிலும் பிரித்தானிய தூதரகம் எல்லா நபர்களிடமும் இதனை அறவிடப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். சில குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே இந்த பணம் அறவிடப்படும். அத்துடம் பிரித்தானியா தயாரித்துள்ள பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்படுவதாக மேலும் அறியப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten