தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைவீரர் படுகாயம்

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 02:08.16 PM GMT ]
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உரும்பிராய் மேற்குப் பகுதியைச் சேர்ந்த  காந்தன் சாளினி என்ற சிறுமியே உயிரிழந்தவராவர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று செவ்வாய்கிழமை மாலை வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தவேளை குறித்த சிறுமியின் கயிறு கழுத்தில் சிக்கியுள்ளது.
சிறுமியை உடனடியாக மீட்டெடுத்து உறவினர்களினால் உடனடியாக   யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமியின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை புதன்கிழமை இச்சிறுமியின் சடலம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைவீரர் படுகாயம்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 02:53.54 PM GMT ]
மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த படைவீரர், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்விபத்தில், 27 வயதான கெலும் என்ற படைவீரரே படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten