நவிப்பிள்ளை அவர்கள் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி இலங்கை சென்று 31ம் திகதிவரை அங்கே தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் அறிகிறது. இன் நிலையில் அவர் நேற்று முந்தினம் தெரிவித்த கருத்துக்கள், சிங்கள மக்களையும் அரசையும் எரிச்சலூட்டியுள்ளது. இலங்கைக்கு நவிப்பிள்ளை அவர்கள் வருவதை மகிந்தர் விரும்பவில்லை. இதனால் அவர் பயணம் தள்ளிப்போனது. இருப்பினும் அமெரிக்கா ஐ.நாவில் கொண்டுவந்த தீர்மானத்தின் அழுத்தம், அதனால் ஏற்பட்ட உலகளாவிய ரீதியிலான அழுத்தம் என்பனவே நவிப்பிள்ளை, இலங்கைக்கு வர மகிந்தர் சம்மதித்துள்ளார்.
ஆனால் நவிப்பிள்ளை அவர்கள் சிறிதும் மாறவில்லை. அவர் தனது நிலையில் திடமாகவே இருக்கிறார் என்பது அவரது செவ்வியின் மூலம் நிரூபனமாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்லும் நவிப்பிள்ளை அங்கே , தன்னிச்சையாகச் சென்று வட கிழக்கு மக்களைப் பார்வையிடவேண்டும் என வேண்டுகோள் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசின் பாச்சா பலிக்குமா இவரிடம் ?
Geen opmerkingen:
Een reactie posten