தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

சர்வதேச கொமியூனிச மாநாட்டில் ஜே.வி.பி தலைவர் பங்கேற்பு

மாலைதீவு பிரஜை ஒருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 03:18.36 AM GMT ]
மாலைதீவு பிரஜை ஒருவர் அலவத்துகொட, மாவத்துபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வீசா இல்லாத நிலையில் நாட்டில் தங்கியிருந்தாக அலவத்துகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி இந்நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சர்வதேச கொமியூனிச மாநாட்டில் ஜே.வி.பி தலைவர் பங்கேற்பு
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 03:30.12 AM GMT ]
பெல்ஜியத்தில் நடைபெறும் சர்வதேச கொமியூனிச கட்சிகளின் மாநாட்டில் ஜே.வி.பி கலந்துக் கொண்டுள்ளது.
ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவும். மேலும் சில பிரதிநிதிகளும் இதற்காக பெல்ஜியம் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச ரீதியாகவும் உள்ள கொமியூனிச கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்கின்றன.
குறிப்பாக வியட்னாம் போன்ற நாடுகளில் ஆட்சி செலுத்துகின்ற 60 கொமியூனிச கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டின் போது, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் அரசியல் நடப்பு விவகாரங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றையும் சோமவன்ச அமரசிங்க சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten