தமிழரின் போராட்ட வாழ்வில் பலரும் பல விதமாய் தம்மை ஈடுபடுத்தியது யாவரும் அறிந்த விடயம். ஆனால் திரு. மணிவண்ணன் அமைதியான வகையில் மிகவும் ஆழமாக தமிழர் போராட்டத்தில் தனக்கு என ஒரு தனியான குணாதிசயத்துடன் தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்.
அத்தகைய உத்தம புருசருக்கு முதலில் என் அக வணக்கத்தையும் அவரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர் என்றால் மிகவும் கருணை என்பதை விட கண்ணீருடன் கதைக்கும் ஒரு மனிதன். ஓரிரு முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அவ்வேளையில் எல்லாம் தன் குடும்ப உறவுகளை ஒரு மனிதன் எவ்வாறு பிரிந்த வேளை நலம் விசாரிப்பார்களே அது போன்று மிகவும் உருக்கத்துடன் விசாரித்து தன் உயரிய பண்பை பலமுறை வெளிக்காட்டியவர் என்றால் மிகையாகாது.
அது மட்டுமல்லாது தன் சிந்தனையை வாழ்வில் பலர் காண வாழ்ந்தவர், வாழ்கிறவர். குறிப்பாக தன் மகனை ஈழப் பெண்ணுக்கு திருமணம் முடித்து வைத்து தன் நல்லெண்ணத்தை உலகறியச் செய்தவர்.
இவ்வாறாக வாழும் போது மிகவும் ஆடம்பரமில்லாமல் தன் வாழ்வில் என்பதை விட தன் குடும்பத்தில் ஈழத்திற்கு உறவுப் பாலம் அமைத்தவர்.
இவற்றுடன் கலை இலக்கியங்களிலும் தன் ஆற்றல்களை தடம்பதித்து திரைப்படத் துறையில் பல விருதுகளையும் தட்டிச் சென்றதை மறக்க முடியாது.
ஈழத்தமிழர் தொடர்பாக பலவித கனவுகளுடன், இலங்கைத் தீவில் பலவித ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வாழும் நிலையே ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் இனம் விடுதலை பெற வேண்டும் என சிந்தனைகள் பலவற்றுடன் உயிர் நீத்த திரு. மணிவண்ணன் கனவுகள் நனவாகி காவியம் படைக்கும் நாட்களே இனிவரும் நாள் என்பதுடன்,
இவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் பலருக்கும் அனுதாபத்தைப் பகிர்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்பதாக அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
Geen opmerkingen:
Een reactie posten