தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

புத்த பயங்கரவாதிகளின் முகம்: டைம்ஸ் சஞ்சிகைக்கு தடைவிதிப்பு !

உலகப் பிரசித்திபெற்ற டைம்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள சர்சைக்குரிய கருத்தால் மியான்மார் பௌத்தர்கள் ஆத்திரமடைந்துள்ளார்கள். ஆனால் இதில் இலங்கைக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. மியான்மார் நாட்டில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற பிக்கு ஒருவர் நாட்டில் கலவரங்களை தூண்டுவதாகவும், அவரால் தான் முஸ்லீம் மற்றும் புத்த மதத்தினரிடையே அடிக்கடி கலவரம் நிகழ்வதாகவும் அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்த பயங்கரவாதிகளின் முகம் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த டைம்ஸ் சஞ்சிகையை மியான்மார் நாடு தடைசெய்துள்ளது. இதேவேளை இச் சஞ்சிகையில், இலங்கையில் புத்த பிக்குகளால் நடத்தப்படும் அராஜகம் தொடர்பாகவும் சில கருத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இலங்கை சுங்கத்துறையினர், குறிப்பிட்ட இந்த டைம்ஸ் சஞ்சிகைக்கு தடைவிதித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த சஞ்சிகையை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதாவது மியான்மாரில் உள்ள புத்த பிக்குவையோ, இல்லை பௌத்த மதத்தைப் பற்றி யாராவது தரக்குறைவாக எழுதினால், அதனை இலங்கை தடைசெய்கிறது என்றால் தமிழர்கள் யோசிக்கவேண்டிய விடையம் இது. குறிப்பாக சிங்களவர்கள் தமது மதத்தால் எவ்வளவு ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்பது இதில் இருந்தே தெரிகிறது.

Geen opmerkingen:

Een reactie posten