தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

தென்னிலங்கையில் இருந்து யாழிற்கு எடுத்துவரும் பொருட்கள் முடிவுத் திகதி அற்றவை!- யாழ். மாநகர சபை ஆணையாளர்

வடமாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆட்சேர்ப்பு (யாழ்.செய்தித் துளிகள்-3)
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 03:33.39 AM GMT ]
வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆசிரியர் சேவையின் வகுப்பு மூன்றாம் தரம் இரண்டு பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குறித்த ஆசிரியர் சேவைக்கு 18 வயதுக்கும், 40 வயதிற்கும் இடைப்பட்ட இலங்கை டிப்ளோமாதாரிகள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
குறித்த பதவிக்கான வெற்றிடங்கள் யாழ்ப்பாணத்தில் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படுவதுடன் இவ் வெற்றிடங்கள் நிரப்படவுள்ளன.
அத்துடன் வடமாகாணத்தில் நானாட்டன், முசலி, மடு, மாந்தை மேற்கு, வவுனியா தெற்கு, செட்டிக்குளம், நெடுங்கேணி, ஓமந்தை, மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டிசுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலி ஓயா, கண்டாவளை, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நடைபெறும் திறந்த பரீட்சை நடைபெறும் இடங்களாக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கனகராயன்குளம், சாவகச்சேரி, நெல்லியடி ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலதிகக் கல்வித் தகைமைகள், ஆட்சேர்ப்பு முறை, விண்ணப்பிக்கும் முறை. பரீட்சைக் கட்டணம் ஆகிய விபரங்களை இலக்கம் 481, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இடையே வாசிப்பு பழக்கம் அருகி வருவது வருந்தத் தக்கது: எஸ். ஸ்ரனிஸ்லாஸ்
மாணவர்கள் இடையே வாசிப்பு பழக்கம் அருகி வருவது வருந்தத் தக்கது என ஆசிரியர் எஸ். ஸ்ரனிஸ்லாஸ் தெரிவித்துள்ளார்.
சரா புவனேஸ்வரனின் பொன் விழாவில் தலைமை உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
வாசிப்பதன் மூலம் மனிதன் பூரணத்துவம் அடைகிறான் என்றும் வாசிப்பை அதிகளவில் மேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் தமது கல்வியில் உயர்ச்சி பெறுவதாகவும் குறிப்பிட்டார்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். குறைவாகப் புள்ளிகனைப் பெறும் தமது பிள்ளைகளைப் பெற்றோர்கள் அதிகம் கண்டிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அடுத்த முறை அதிக புள்ளிகளைப் பெற்று முன்னேற்றம் காண முயற்சி செய்ய வேண்டும் எனக்கூறி அவர்களை அன்புடன் அரவணைத்தல் அவசியமானது எனவும் தெரிவித்த ஆசிரியர் எஸ்.ஸ்ரனிஸ்லாஸ், இது மாணவர்களின் மனதில் உள ரீதியான உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாகும் என குறிப்பிட்டார்.
மாணவர்கள் எல்லோரும் ஒரே குணம் படைத்தவர்கள் அல்லர் என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள் என்றும் கருத்து வெளியிட்ட ஆசிரியர் எஸ்.ஸ்ரனிஸ்லாஸ் ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தான் என்பது முக்கியமல்ல.
என்ன என்ன சாதனைகளை சாதித்தான் என்பதே முதன்மை வகிக்கின்ற என்று மேலும் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அடையாள அட்டை இல்லதாவர்களுக்கு தேசிய அடையாள அட்டை !- பவ்ரல்
வடமாகாண சபைத் தேர்த்தலில் வாக்களிப்பதற்காக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையை பவ்ரல் அமைப்பு முன்னெடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பவ்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் நடமாடும் சேவை கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டைகள் அற்றவர்களுக்கு அவற்றை வழங்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 7ம் திகதி வரை யாழில் நடைபெறவுள்ள குறித்த நடமாடும் சேவைகள் 5ம் திகதி காரைநகரிலும், 6ம் திகதிகளில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவிலும் இடம்பெறவுள்ளதாக பவ்ரல் அமைப்பின் திட்ட முகாமையாளர் அறிவித்துள்ளார்.
வடமாகாண சபைத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் தேசிய அடையாள அட்டையின்றி உள்ளனர்.
குறித்த நடமாடும் சேவையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஏழு அதிகாரிகள் கலந்துகொண்டு அடையாள அட்டைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நடமாடும் சேவையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆள் அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கப்பட உள்ளதாகவும் பவ்ரல் அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் குறிப்பிட்டார்.

தென்னிலங்கையில் இருந்து யாழிற்கு எடுத்துவரும் பொருட்கள் முடிவுத் திகதி அற்றவை!- யாழ். மாநகர சபை ஆணையாளர்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 04:31.25 AM GMT ]
யாழ். குடாநாட்டிற்கு தென்னிலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்கள் பலவும் காலம் கடந்தவையாகவும் உற்பத்தித் திகதி அவற்றின் முடிவடையும் திகதி என்பன குறிக்கப்படாமல் வர்த்கர்களால் எடுத்துவந்து வியாபாரம் செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே உணவு கையாளும் நிலையங்களுக்கு புதிய தர நிர்ணயம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாநகர
சபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் குறிப்பிட்டுள்ளார்.
உணவு கையாளும் தரத்தினை மேம்படுத்தும் நடவடிக்கைகளை யாழ். மாநகர சபை தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட எஸ். பிரணவநாதன், இதற்கென எச் 800 படிவம் சகல உணவு கையாளும் நிலையங்களுக்கு பூரணப்படுத்தப்படும் செயற்பாடுகளை யாழ். மாநகர சபை தனது எல்லைக்குள் முன்னிலைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் உணவு கையாளும் சகல நிலையங்களுக்கும் வழங்கப்படவுள்ள சான்றிதழ்களை நிலையங்களின் முன்பாக பார்வையிடக்கூடிய வகையில் வைக்க வேண்டும் என்று யாழ் மாநகர சபை ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஏ தரச் சான்றிதழைப் பெற்ற உணவு கையாளும் நிலையங்கள் தரம் சி யை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனையை மேற்கொள்ளும் சுகாதார பரிசோதகர்கள் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உணவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் பரிசோதனை செய்வதாகவும் தெரியவருகிறது.
சந்தேகமான உணவுப் பொருட்கள் தொடர்பான மாதிரிகளையும் எடுத்துச்சென்று பரிசோதனைகளுக்கு உட்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இருந்து பெறப்படும் மாதிரிகள் அனுராதபுரத்தில் அமைந்துள்ள அரச ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அறிக்கைகள் பெற நடவடிக்கைகளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பொறுப்பதிகாரி மேற்கொண்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten