தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதியைக் கரம் பிடித்தார் இராணுவ வீரர் !

முல்லைத்தீவு முள்ளியவளை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது.
முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது காலாட்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார (வயது 22) என்ற இராணுவ வீரருக்கும், மேரி தெரேசா (வயது 20) என்ற தமிழ் யுவதிக்குமே திருமணம் இடம்பெற்றது.
இருவருக்கும்டையில் ஏற்பட்ட காதல் தொடர்பினையடுத்து, வீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவு 23வது காலாட்படை முகாமின் தளபதி கேணல் சஷிந்திர விஜேவர்தன தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten