தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

ஆஸி.யில் மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலைசெய்த இலங்கையருக்கு மகள்மார் ஆதரவு !

தனது மனைவியை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த, இலங்கையைச் சேர்ந்த சம்பத்வடுகே யூஸ்டஸ் சுதத் சில்வா என்பவருக்கு அவரது மகள்மார் இருவரும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் வசிக்கும் 51 வயதான சுதத் சில்வாவிற்கு அவரது மனைவி குருகுலசூரிய என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குறைந்தது 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பேர்த்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுதத் சில்வாவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக அவரது மகள்மாரான அமலி மற்றும் பவித்ரா ஆகியோர் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
தன் மனைவி மீது எழுந்த சந்தேகம் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சுத்தியலால் அவரது தலையில் மும்முறை தாக்கிக் கொலை செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனை சுதத் சில்வா ஒப்புக்கொண்டிருந்தார்.
இவர் தமது குடும்பத்தினருடன் 2005ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்று குடியேறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten