தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 4 juni 2013

இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இலங்கைப் பெண்கள் மூவர் விமானநிலையத்தில் கைது

அம்பாறை வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்! மேலும் மூவர் படுகாயம்
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 05:39.40 AM GMT ]
அம்பாறை  பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படு காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த போதே குறித்த கார் இன்று  அதிகாலை 3.30 மணியளவில் கொனாகொல்ல நெடுஞ்சாலையில் பள்ளம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து காரணமாக சாய்ந்தமருது 5ம் பிரிவு பிரதான வீதியைச் சேர்ந்த ஜெமீலா அநூன் காரியப்பர் (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கல்முனை பட்டின சபையின் முதலாவது தவிசாளராக பதவி வகித்த மர்ஹூம் இஸ்மாயில் காரியப்பரின் மூத்த புதல்வியும் மர்ஹூம் ஜெமீல் காரியப்பரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது ஜனாஸா தற்போது அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று (04) இரவு சாய்ந்தமருது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவரது மருமகன் எஸ்.எம் அஜ்வத் தெரிவித்தார்.
அதேவேளை அவருடன் பயணித்து காயமடைந்த மகள் உட்பட மூன்று உறவினர்களும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் எஸ்.எம் அஜ்வத் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இலங்கைப் பெண்கள் மூவர் விமானநிலையத்தில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 05:47.10 AM GMT ]
சட்டவிரோதமாக 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை இந்தியாவுக்கு கடத்திச் செல்ல முற்பட்ட கொழும்பு தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு செல்வதற்காக வந்த குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 20 வளையல்கள் மற்றும் மூன்று மாலைகள் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவலகள் தெரிவித்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten