பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட தாய் 65 வயதானவர் எனவும் மகள் 21 வயதானவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டில் கருவா உரித்துக் கொண்டிருந்த போது இரவு 8.00 மணியளவில் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த நால்வர் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி கட்டிப் போட்டுவிட்டு தாயையும் மகளையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான தாயும் மகளும் எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என மேலும் அறியப்படுகிறது.
இச் செயலில் தப்பியோடிய இராணுவத்தினரே ஈடுபட்டிருக்கமுடியும் எனவும் இல்லை என்றால் இராணுவத்தினரே இவ்வாறு நடந்துகொண்டிருக்கவேண்டும் என்று ஊர் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten