தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 juni 2013

பாடகியான மாயாவின் தொலைபேசியும் ஒட்டுக்கேட்க்கப்பட்டது ! ha ha ha!!

சர்வதேச அளவில் பொப் பாடல்களில் புகழ்பெற்று மாயா என்று அழைக்கப்படுபவர், மாதங்கி அருள்பிரகாசம் ஆவார். இவர் தந்தையார் முதற்கொண்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஈழ ஆதரவாளர்களே. சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகொடுக்கும் போது, மாயா பல தடவை இலங்கை தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும் அவர் பேசியிருக்கிறார். இன் நிலையில் அவர் அமெரிக்கா சென்ற வேளை அவரது தொலைபேசியும் அமெரிக்க என்.எஸ்.ஏ நிறுவனத்தால் ஒட்டுக்கேட்க்கப்பட்டது என அவர் நேற்று முந்தினம் தொலைக்காட்சிக்கு கொடுத்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் விமானப்படை ஒன்றை அமைத்தவேளைபார்த்து , பேப்பர் பிளோன்ஸ் என்று ஒரு பாடலை அவர் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போக்கை கொண்டுள்ள மாயாவை, அமெரிக்க என்.எஸ்.ஏ நிறுவனம் உளவுபார்த்துள்ளது. இது தனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் அமெரிக்க உளவுத்துறையில் இருந்து தப்பிச் சென்ற எட்வேர்ட் ஸ்னோடன் , ஹாங்காங்கில் தஞ்சமடைந்தார். பின்னர் அவர் ரஷ்யா சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஹாங்காங்கில் வைத்து வெளியிட்ட செய்திகளும் இதனையே குறிப்பிடுகிறது.


Geen opmerkingen:

Een reactie posten