தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 mei 2012

யாழ்-கொக்குவில் அகதிமுகாம் மீதான படுகொலைத் தாக்குதல்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 19) நிராஜ் டேவிட்


எப்படியெல்லாம் பொய் சொல்கிறார் இவர்,எங்கள் குடும்பமும் அப்போது அங்குதான் இருந்தனர்.நான் மஞ்சவண்ணப்பதி முருகன் கோயிலில் இருந்து தாக்குதலை நேரில் பார்த்தேன்,அடுத்தநாள் இணுவிலூடாக கல்லூரிக்கு முதன்முதல் ஊடுருவி சென்றது நானும் எனது நண்பர்களும்,அப்போது ராணுவம் உள் நுழையவில்லை,புலிகள் அச்சத்தில் அவர்கள் இருந்தனர்,தாக்குதலால் பொதுமக்கள் இறந்து அப்போது மைதானத்தில் புதைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.நான் என் சகோதரருடன் அங்கிருந்து தப்பி சண்டிலிப்பாய் சென்றேன்,இரு நாட்களின் பின் அம்மாவும் அப்பாவும் அதே வழியில் தப்பினர்.சுற்றிவளைக்கப்பட்டது என்பதே பொய்!முன்பக்கம் இராணுவம் இருந்தது,பின்பக்கம் யாருமே இல்லை,விசாகபதி ஆசிரியரும் பெரியவர்களும் ராணுவத்துடன் பேசினர்,அவர்களை ராணுவம் கொடுமை செய்தது,புலிகள் சுட்டதாக சொன்னது.உணவின்றி பரிதவித்த மக்கள் புலிகள் கல்லூரிக்கு குண்டு வைக்கப்போவதாக உண்டான புரளியால் பின்பக்கமூடாக சிலநாட்களில் தப்பியோடினர்.இந்திய ராணுவம் கொலைகாரர் என்பது உண்மை,அதைவிட நம்மவர் கொடூரர்,இதுதான் உண்மை!!
கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாம் மீது இந்தியத் துருப்புக்கள் மேற்கொண்ட கொலை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பற்றி அவலங்களின் அத்தியாயங்கள் என்ற இந்தத் தொடரில் நிச்சயம் பகிரப்பட்டேயாக வேண்டும்.
கொக்குவில் சம்பவம் 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்றது.
யாழ் கொக்குவில் பகுதிக்குள் கவசவாகனங்கள் சகிதமாக இந்தியத் துருப்புக்கள் உள்நுழைந்தபோது, அங்கிருந்த பெரும்பாண்மையான பொதுமக்கள் கொக்குவில் இந்துக் கல்லூரியிலேயே தஞ்சமடைந்திருந்தார்கள்.
கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமில் சுமார் ஏழாயிரம் அகதிகள் வரையில் அப்பொழுது தங்கியிருந்தார்கள். மூன்றுமாடிக் கட்டிடத்தைக் கொண்ட அந்தக் கல்லூரியின் முகப்பில் அகதி முகாம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிப்புப்பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் மற்றய அகதி முகாம்கள் மீது இந்தியப் படையினர் வேண்டும் என்றே செல் தாக்குதல் நடாத்தியிருந்த விடயம் கொக்குவில் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அதனால், அகதி முகாம் என்றமட்டில் அங்கு தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு ஆபத்து எதுவும் இருக்காது என்றே அங்கிருந்த பெரியவர்கள் நினைத்தார்கள்.
இந்த விடயத்தைக் கூறி அங்கிருந்த மற்றவர்களையும் ஆறுதல்படுத்த முற்பட்டார்கள். 25.10.1987 நன்பகல் 2 மணியளவில் இந்தியப் படையின் யுத்தத்தாங்கி ஒன்று அகதிமுகாம் வாசலில் வந்து நின்றது.
சங்கிலிச் சக்கரத்தில் நகர்ந்து வந்த டாங்கி முகாமை நெருங்கும் சத்தம் அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே கேட்டது. தமிழர்களுக்கே உரிய இயல்பான விடுப்புப் பர்க்கும் ஆர்வத்தில், என்ன நடக்கின்றது என்று பார்ப்பதற்கென்று ஒரு தொகுதி மக்கள் முண்டியடித்துக்கொண்டு முகாம் வாசலுக்கு சென்றார்கள்.
கல்லூரிச் சுவர் ஓரமாக நின்று வேறு சிலர் புதினம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முன்பாக வந்து நின்ற இந்தியப் படையினரின் யுத்தத்தாங்கி சற்று நேரம் அமைதியான நின்றது.
டாங்கியில் இருந்த இந்தியப் படையினர் தம்மை வேடிக்கை பார்க்கும் மக்களை நிதானமாக அவதானித்தார்கள்.
அந்த டாங்கியில் இந்தியப் படை உயரதிகாரியான கேணல் மிஸ்ரா இருந்தார். அகதிமுகாம் நிலவரத்தை அவர் நிதானமாக அவதானித்தார். அகதி முகாம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்ட பெயர்ப் பலகையையும் அவர் கண்கள் காணத் தவறவில்லை.
தாக்குதல்:
திடீரென்று இந்தியப் படை யுத்தத்தாங்கியின் சுடுகுழல் இந்துக் கல்லூரியை நோக்கி மெதுவாகத் திரும்ப ஆரம்பதித்தது.
ஆர்வக் கோளாறு காரணமாக அகதிமுகாம் வாசலுக்கு வந்தவர்கள், இந்தியப் படையினரைப் பார்த்து கையசைத்தவர்கள், பரிதாபமாக நடப்பவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் - இவர்களை நோக்கி டாங்கியின் சுடுகுழல் குறிவைத்தது.
அப்பொழுதுகூட எவரும் இந்தியப் படையினர் இப்படியான ஒரு கரியத்தை செய்வதற்குத் துணிவார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை. திடீர் என்று தாங்கியில் இருந்து அடுத்து அடுத்து செல்கள் ஏவப்பட்டன.
சற்று முன்னர் அங்கு நிலவிய அசாதாரணமான அமைதியும், இந்தியப் படை டாங்கியின் நகர்வும் ஏதோ அசம்பாவிதம் ஒன்று அங்கு நடைபெறப்போகின்றது என்பதை அங்கிருந்த சில பெரிசுகள் மனங்களில் எச்சரிக்கை செய்திருந்தது. எனினும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.
இந்திய டாங்கியில் இருந்து ஏவப்பட்ட செல் ஒன்று கல்லூரி வகுப்பறை சுவரின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வகுப்பறையினுள் விழுந்து வெடித்தது. அந்த வகுப்பறையினுள் அடைக்கலமாகியிருந்த 24 அகதிகள் துடிதுடித்து உயிரிழந்தார்கள். முகாம் அல்லோல்ல கல்லோலப்பட்டது.
உயிர் தப்பியவர்களுக்கு முதலுதவி வழங்கச் சில ஓடித்திரிந்தார்கள். ஆனால் முகாம் மீது தாக்குதல் நடாத்திய அந்த யுத்தத்தாங்கி தாக்குல் நிலையெடுத்து தொடர்ந்து அங்கு தரித்து நின்றது. அதனால் வெளியில் எவராலும் செல்லமுடியவில்லை.
பயம், பதட்டம், பரிதாபம் - அந்த இடமே நடுங்கிக்கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்று அங்கிருந்த எவருக்குமே தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் முகாமை நோக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தெய்வாதீனமாக உயிரிழப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. கல்லூரி சுவரில் பட்டு செல் வெளியிலேயே வெடித்துவிட்டதால், உள்ளே இருந்தவர்கள் தப்பிவிட்டார்கள். அன்றைய நாள் முழுவதும் அந்த அகதிமுகாம் இந்தியப் படையினரின் முற்றுகைக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தது.
முகாமினுள் இருந்தவர்களுக்கு எந்தவித உணவும் கிடைக்காது மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குலினால் பலியானவர்களை அடக்கம் செய்வதற்கு பாடசாலை வளாகத்தினுள் குழி ஒன்றை வெட்டும் பணியில் அங்கிருந்த சிலர் ஈடுபட்டார்கள்.
உடல் சிதறிப் பலியானவர்களை சனநெருக்கடிமிக்க முகாமினுள் தொடர்ந்து வைத்திருப்பதை அங்கிருந்த பலர் விரும்பவில்லை. வகுப்பறைகளில் இருந்த கரும்பலகைகளில் பலியானவர்களின் உடல்களைக் கிடத்தி, தோண்டப்பட்ட குழியினுள் ஒன்றாகவே போட்டு மூடினார்கள்.
இந்தியப் படையினர் மீண்டும் தாக்குதல் நடாத்தக்கூடும் என்ற பயத்தில் அங்கிருந்தவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்திருந்தார்கள்.
இந்திய டாங்கிகளின் சுடுகுழல்களால் குறிவைக்கப்பட்ட நிலையில் அன்றைய இரவு கடந்தது. அன்று அங்கு முகாமில் தங்கியிருந்த எவருமே தூங்கவில்லை.
உயிர் தப்பிக்கத் திட்டம்:
மறுநாள் காலை விடிந்தது.
அங்கிருந்த ஏழாயிரம் பேரின் உயிர்களும் ஊசலாடியபடிதான் மறுநாள் காலை விடிந்தது. அந்த முகாமில் தங்கியிருந்த ஒரு பெரியவர் அங்கிருந்த மற்றவர்களிடம் ஒரு திட்டத்தைத் தெரிவித்தார்.
அங்கு தங்கியிருந்த அகதிகள் சிலரை அழைத்த அவர், “நாங்கள் அகதிகள் என்று தெரியாமல்தான் இந்தியப் படையினர் எம்மீது தாக்குதல்கள் நடாத்தியிருக்கக்கூடும். முதலில் நாங்கள் அகதிகள்தான் என்கின்ற விடயத்தை எம்மை முற்றுகையிட்டிருக்கும் இந்தியப்படையினருக்குத் தெரியப்படுத்துவோம்” என்று அந்தப் பெரியவர் ஆலோசனை தெரிவித்தார்.
ஏற்கனவே கடுப்புடன் இருந்த சிலர் பெரியவரின் அந்தக் கருத்துக்குச் செவிசாய்க்கவில்லை. “அதுதான் அகதி முகாம் என்று கொட்டை எழுத்தில் எழுதி கல்லூரியின் முன்பு அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருக்கின்றதே” என்று சலித்துக் கொண்டார்கள்.
அதற்கு அந்தப் பெரியவர், “பதட்டத்திலும், கோபத்திலும் காணப்படும் படையினருக்கு அந்தப் பெயர்ப்பலகையை வாசிக்க நேரம் இருந்திருக்காது. ஒருவேனை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டிருக்கும் அந்தப் பெயர்ப்பலகையை வாசிப்பதற்கு அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். எனவே நாங்கள் அகதிகள்தான் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும்” என்று தெரிவித்தார்.
“அப்படியானால் என்ன செய்வது? நாங்கள் அகதிகள் என்று கூறிக்கொண்டு குதிப்பதா?” அங்கிருந்த சில இளைஞர்கள் கோபத்துடன் கேட்டார்கள்.
பெரியவரும் விடுவதாக இல்லை. “தம்பிகள் கூறுவது சரி. நாங்கள் அகதிகள் என்பதை உரக்கக் கூற வேண்டும். குறிப்பாகப் பெண்கள் தாம் அகதிகள் என்று கத்த வேண்டும். அதேவேளை என்னைப் போன்ற வயது முதிந்தவர்கள் கைகளில் வெள்ளைக்கொடிகளை அசைத்து நாங்கள் அப்பாவிகள் என்று காண்பிக்க வேண்டும். பெடியள், தலைக்கு டை அடித்து பெடியள் போன்று நடிப்பவர்கள் அனைவரும் மரியாதையாக வகுப்பறைகளுள் சென்றுவிடவேண்டும்” என்று தனது திட்டத்தை அழுத்தமாகத் தெரிவித்தார்.
வேறு வழி எதுவும் தெரியாமல் தவித்தவர்கள் பலவிதமான விவாதங்களின் பின்னர் அந்தப் பெரியவரின் திட்டப்படி செயற்படுவதற்குச் சம்மதித்தார்கள்.
“நாங்கள் அகதிகள்”
26ஆம் திகதி காலை புலர்ந்து சிறிது நேரத்தில் அந்த அகதி முகாமில் இருந்த பல நுற்றுக் கணக்கான பெண்களும், சிறுவர்களும், “நாங்கள் அகதிகள் என்று ஆங்கிலத்தில் உரத்த குரலில் கத்தினார்கள்.
பெரியவர்கள் தமது வேஷ்டிகளையும், வெள்ளைச் சட்டைகளையும் கம்புகளில் கட்டி கொடிகளாக்கி இந்திய இராணுவத்தினரை நோக்கி அசைத்துக் காண்பித்தார்கள். நல்ல பலன் கிடைத்தது.
தமது வாகனங்களை விட்டிறங்கிய சில இந்தியப் படையினர் அகதி முகாமிற்குள் வந்தார்கள். மிகவும் எச்சரிக்கையுடன் துப்பாக்கிகளை நீட்டியபடிதான் அவர்கள் உள்ளே வந்தர்கள். அகதி முகாமில் இருந்த எவரும் தாம் இருந்த இடங்களை விட்டு அசையவே இல்லை.
இந்தியப்படையினர் அகதிமுகாமை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு அகதி முகாமில் பரவலாக நிலை எடுத்து நின்றார்கள். அதனைத் தொடர்ந்து இந்தியப் படை உயரதிகாரி ஒருவர் அகதி முகாமினுள் ஆயுதம் தாங்கிய தனது மெய்பாதுகாவலர்களுடன் நுழைந்தார்.
அந்த அதிகாரியின் பெயர் கேணல் மிஸ்ரா.
அதிகாரத்துடனும், மிரட்டலுடனும் அங்கிருந்த அகதிகளைப் பார்த்து கர்ஜித்தார்.நீங்கள் உங்கள் கூடவே மறைத்து வைத்திருக்கும் புலிகளை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் நான் பார்த்துக்கொள்ளுவேன். அவர்களிடத்தில் உங்களுக்கு பயம் என்றால் அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தையாவது எங்களுக்கு காட்டித்தாருங்கள். அவர்களை நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம்.”
அங்கிருந்த அகதிகள் முகத்தில் ஈ ஆடவில்லை.
”இந்த மனுசனுக்கு என்ன விசர் கிசர் பிடித்துவிட்டதோ?” கோபத்துடன் முனுமுனுத்த ஒரு தாயின் கையை, அருகில் நின்ற அவரது பேத்தி கிள்ளிவிட்டார். பேத்தியைத் திரும்பிப் பார்த்த அந்த அம்மாவை ஒரு முறைப்பு முறைத்து அவளது வாயை அடக்கினாள். அங்கிருந்த பலரது மனநிலையும் அப்படித்தான் இருந்தது.
சிலர் துணிவை வரவளைத்துக் கொண்டு ”இது முழுக்க முழுக்க அதிகள் மட்டுமே தங்கியிருக்கும் இடம். இங்கு புலிகள் எவருமே கிடையாது” என்று கூறினார்கள்.
அதற்கு அந்த அதிகாரி, “அப்படியானால் நேற்று இரவு இந்த இடத்தில் இருந்து எங்களுடன் சண்டையிட்டது யார்? எமது பீரங்கிப் படையினர் தாக்கிப் பல புலிகள் கொல்லப்பட்டிருந்தார்களே. அவர்களின் உடல்களையெல்லாம் புலிகள்தானே சுமந்துகொண்டு தப்பிச் சென்றார்கள்?” என்று தொடர்ந்து கேள்வியெழுப்பினார்.
இறந்தவர்கள் பொதுமக்கள். அவர்களை வேறு வழியில்லாமல் நாங்கள் இங்கேயே புதைத்துள்ளோம். நீங்கள் எங்களைச் சந்தேகித்தால் வாருங்கள் தோண்டிக் காண்பிக்கின்றோம்” என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
அதிகாரிக்கு உண்மை விளங்கியிருந்தாலும், அதனை ஏற்றுக் கொண்டு தனது பிழையை ஒப்புக்கொள்ள அவர் தயாரில்லை. ”சரி உங்களுக்கு இப்பொழுது என்ன வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட மக்கள், “இங்கு நிறையப் பேர் இருக்கின்றார்கள். இவர்களுக்குத் தேவையான உணவு இங்கில்லை. அவசரத்தில் உணவை எடுத்துவரத் தவறிவிட்டோம். நாங்கள் எங்கள் வீடுகளுக்குச் சென்று இங்கிருப்பவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை எடுத்து வருவதற்கு எங்களை அனுமதிக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்கள்.
வெளியில் போகவே முடியாது என்று ஒரேயடியாக மறுத்த அந்த அதிகாரி உணவு கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களும் அங்கிருந்த அகதிகளுக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை. மிருந்த பசியால் அங்கிருந்தவர்கள் வாடினார்கள்.
அதேவேளை, பசியில் துடிதுடித்த அந்த அகதிகளை வைத்து வேடிக்கை காண்பிக்கவென மற்றெரு இந்தியப்படை அதிகாரி அங்கு வருகை தந்தார்.
அவலங்கள் தொடரும்...

Geen opmerkingen:

Een reactie posten