தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 mei 2012

சர்வதேச கொள்ளையர்கள் சரணடையும் இடமாக மாறியுள்ள இலங்கை !



சீன வங்கிகளில் பல மில்லியன் டொலர் பணத்தை மோசடி செய்த சீனப் பிரஜைகள் 17 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ராஜகிரியவில் இன்று கைது செய்தனர் என அதிர்வு இணையம் அறிகிறது. சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை இவர் பல வங்கிகளில் கொள்ளையடித்துள்ளனர். இவர்களில் 6 பேர் பெண்களாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் சுற்றுலாப் பயணிகள் போல இலங்கைக்குள் வந்த இவர்கள், பின்னர் கோத்தபாயவின் ஆட்களுடன் சேர்ந்து அங்கேயே தங்கிவிட்டனராம். கொள்ளயடித்த பணத்தில், கோத்தபாயவுக்கு எவ்வளவு பங்கு கொடுப்பது என்பது போன்ற தகறாறு முற்றியுள்ள நிலையில், கோத்தபாயவின் குழு கேட்ட பணத்தை அவர்கள் கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்றும் அறியப்படுகிறது.


இதனை அடுத்து, இக் குழுவினர் இலங்கையில் உள்ள இன்டர்போல் பொலிசாரிடம், இவர்கள் தொடர்பான தகவல்களைக் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இவர்களைக் கைதுசெய்து இன்டர்போல் பொலிசாரிடம் கையளித்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது. இதுதொடர்பாக, இலங்கையிலுள்ள இன்டர்போல் கிளையின் அனுமதியுடன் சீனப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவர்கள் கொள்ளையடித்த பணம் இலங்கையில் இல்லை என்றும், அது பிறிதொருநாட்டு வங்கியில் இடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக் கும்பலை விசாரிக்க சீனாவில் இருந்து, சீனப் பொலிசார் வந்துள்ளமை பெரும் பரபரப்பான விடையம். இருப்பினும் இலங்கை அரச ஊடகங்கள் எதுவும் இது குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து கணினிகள் மற்றும்பல கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் நாடுகடத்தப்படும் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று விடையம் அறிந்த வட்டாரங்கள் அதிர்வின் நிருபருக்குத் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten