தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 mei 2012

யாழ் மே தின ஊர்வலத்தில் தமிழீழ தேசிய கொடி பிடித்த நபரும், தமிழீழ சட்டை போட்ட நபரும் - நடந்தது என்ன?


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் மே தின ஊர்வலம் கோயில் வீதியூடாக வந்து கொண்டிருந்தவேளை, ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் புலிக்கொடியை விரித்துக் காட்டியவாறு ஓடிச்சென்று மறைந்துள்ளார்.
தனது காற்சட்டைப் பைகளில் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியை எடுத்து, மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களுக்கு காட்டியுள்ளார்.
இதேவேளை, இன்னுமொருவர் தமிழீழ படம் பொறிக்கப்பட்டுள்ள உள்சட்டையை அணிந்து அதன்மேல் வேறொரு சட்டையை அணிந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டதோடு, குறிப்பிட்ட நேரத்தின் பின்  தனது மேற்சட்டையை கழட்டி தமிழீழத்தைக் காட்டியவாறு ஓடியுள்ளார்.
ஊர்வலத்தை படமெடுத்த வீடியோ கமராக்கள் இவற்றையும் படமெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர்கள் எதற்காக இவ்வாறு செய்தனர் என்பதும், அவர்களது நோக்கம் என்ன என்பதும்,  அவர்கள் யார் என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை.




Geen opmerkingen:

Een reactie posten