[ கொழும்பு நிருபர் ]
நேற்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையை தொழில்கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் பிரௌனிடம் விடுத்தனர்.
அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளவர்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குடிவரவுத்துறை அமைச்சரும் நாட்டின் சட்டமா அதிபரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
அதற்கு பதிலாக பிரச்சினையை காலந்தாழ்த்தி வருவதாக தொழிற்கட்சியினர் குற்றம் சுமத்தினர்
இலங்கை பெண்ணான ரஞ்சனி மெல்போனில் ஒரு வருடத்துக்கு மேலாக வசித்து வந்தநிலையில் அவரின் இரண்டு பிள்ளைகளுடன் அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்படடுள்ளமை மோசமான செயல் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்
இதற்கிடையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளின் விபரங்களை இலங்கை அரசாங்கத்துடன் பரிமாறிக்கொண்டதாக வெளியான செய்தி குறித்தும் நேற்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது
எனினும் இந்தக் குற்றச்சாட்டை அவுஸ்திரேலிய புலனாய்வுத்துறை தலைவர் ஏற்கனவே மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten