தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 mei 2012

தமிழரசுக் கட்சியின் மாநாட்டு மண்டபத்தை தீயிட்டோர் தமிழ் மக்களின் உணர்வுகளை அழிக்க முடியாது!


[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 12:14.45 AM GMT ]
தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாடு நடைபெறும் மண்டபத்தை நன்கு திட்டமிட்ட வகையில் தமிழ் விரோத சக்திகள் சிங்களத்துடன் இணைந்து தீயிட்டு சிதைக்க முற்பட்டமை தமிழ் மக்கள் அணி திரள்வதை ஜீரணிக்கமுடியாமல் இயலாமையின் வெளிப்பாடே என கிழக்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் தேசிய மகாநாடு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருந்த நிலையில் ஏற்பாட்டு மண்டபத்தை நன்கு திட்டமிட்டு முடக்க எடுத்த முயற்சிக்கு பொலிசாரும் இணைந்து மின்சார ஒழுக்கு என ஆருடம் சொல்லியிருக்கும் நிலையில் நன்கு திட்டமிட்ட செயலாகவே அவதானிக்கப்படுகிறது
தமிழர்களின் பலத்தை உலகம் விழிக்க எத்தனித்த வேளையில் அதனை சிதைத்து எம் இனத்தை பலவீனப்படுத்திய அனைத்து பங்கும் தமிழ் விரோத சக்திகளே என்பது யாவரும் அறிந்த விடயம்.
தமிழர்களின் கடந்த கால நிகழ்கால அரசியல் களத்தில் தமிழரசுக் கட்சியின் பங்கு அளப்பரியது அகிம்சை வழியில் தமிழர்களின் உரிமைகளை அடக்கு முறையாளர்கட்கு எதிராக உரிமை முழக்கம் இட்ட கட்சி மட்டுமன்றி இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய தலைமை மக்களுக்கு அறிமுகம் செய்த வேளை முகவரியாக தெரிவு செய்த அடையாளம் வீடு இன்று வரை அவரின் உயரிய சிந்தனையின் அடையாளமாகும்.
இவ்வாறான மகத்துவம் மிக்க கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் அரசால் இயக்கப்படும் அரசியல் அறிவில்லாதவர்கள் என்பது தெளிவாக புலனாகிறது.
இன்றைய நடைமுறை அரசியலில் எதிரியின் தமிழ் இன அழிப்பிற்கு சற்றும் தாமதமின்றி கிழக்கு தமிழர்கட்கு முகவரி வழங்கியவர்கள் என மார்பு தட்டி தமிழர்களை அழிப்பதுடன் நின்று விடாது தமிழர்களின் பலத்தையும் சீண்டிப்பார்ப்பது நகைப்பாயுள்ளது.
மகாநாட்டுக்கு எதிராக பல துண்டுப்பிரசுரங்கள் எல்லாம் ஒட்டப்பட்டமை முதிர்ச்சியற்ற அரசியல் மக்கள் பாரியளவில் அணிதிரண்டால் சிங்களத்திடம் தாம் கூறியுள்ள கிழக்கு மக்கள் தமது பலம் எனும் தரவு பிழையாகி விடும் எனும் மனப் பயமும் இச் செயற்பாடு செய்யக் காரணமாயிருந்துள்ளது.
செயற்கையாக செய்யப்படும் சம்பவங்களையும் இயற்கையாக நடந்ததாக மாற்றும் திறமை வாய்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஜனநாயகம் கூறும் நாட்டில் இருப்பது எதிர்காலத்தில் பாரிய எதிர்த் தாக்கத்திற்கு வித்திடும் என்பது மட்டும் உண்மை.
மக்கள் செல்வதை தடுக்கும் இறுதிக்கட்ட முயற்சியாக சனி ஞாயிறு தினங்களில் வாகன தவிர்ப்பு கடையடைப்பு என்பனவற்றில் ஈடுபட உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தாலும் அவற்றை தகர்த்து மக்களை பயமின்றி அணிதிரட்டும் அனைத்து பலமும் தமிழரசுக் கட்சியினரையும் மக்களையும் சாரும்.
இவ் இடத்தில் தமிழ் தேசிய மக்கள் விழிப்பாய் இருந்து தடைகளை தகர்ப்பது இன்றைய காலத்தின் தேவை என்பதை நாம் அனைவரும் நன்கு உணர்ந்து செயற்படுவது அவசியமாக உள்ளது.
கடந்த கால எம் இன விடுதலைப் போராட்ட காலங்களில் நாம் கண்ட இடர்களை விட இவைகள் கடினத்தன்மை இல்லை. எமது பலத்தை மீண்டும் ஒரு முறை தென் தமிழ் ஈழத்தில் நிரூபிப்பது எம் அனைவரினதும் தலையாய கடமை என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்
கிழக்கு மாகாணம்

Geen opmerkingen:

Een reactie posten