தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 mei 2012

காத்தான்குடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீவைத்து எரிப்பு!


[ சனிக்கிழமை, 26 மே 2012, 04:00.31 AM GMT ]
மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று சனிக்கிழமை மாலை திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி ஏத்துக்கால் வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று சனிக்கிழமை மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட இருந்த நிலையிலே இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten