தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 mei 2012

பல்கலைக்கழக மாணவன் மீது வீழ்ந்த அடி அல்ல! இது தமிழ் இனத்தின் மீது வீழ்ந்த அடி!- சிறிதரன் எம்.பி கண்டனம்!



[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 10:04.42 AM GMT ]
முள்ளிவாய்க்கால் மண்ணில் மாண்டுபோன சொந்த உறவுகளின் நினைவுகளை மனங்களில் கூட தாங்கிக் கொள்ள அனுமதிக்காத பேரினவாத சக்திகளின் கத்தி முனைக்கு முன்னால் இன்றும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதையே, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.தர்ஸானன் மீதான தாக்குதல் உணர்த்தியிருக்கின்றது.
ஆனால் அடக்குமுறையும், அதனோடு கூடிப்பிறக்கும் அடாவடிகளும் தமிழர் மனங்களில் சுதந்திர எண்ணத்தை புதுப்பித்துக் கொடுக்கின்றது, இதற்காக ஒரு நாள் சர்வதேசத்திற்கும் தமிழர்களும் ஜனநாயக வேடதாரிகள் பதில்சொல்ல வேண்டும்.
மேற்கண்டவாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தி|ருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று காலை தர்ஸான் பல்கலைக்கழகம் நோக்கின் சென்று கொண்டிருந்த சமயம், அதிக மக்கள் நடமாட்டமும், இராணுவ, பொலிஸ் நடமாட்டமுள்ள கலட்டிப் பகுதியில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டிருக்கின்றார்.
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, பல்கலைக்கழகத்தில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த காரணத்திற்காகவே இவர் தாக்கப்பட்டிருக்கின்றார்.
இதை நாம் உணராமல் இல்லை.
இதற்கு முன்னர், மாணவர் ஒன்றியத்தின் தலைவர், தவபாலன் தாக்கப்பட்டார், அதுவும் இவ்வாறானதொரு இடத்திலேயே, அதற்கும் எந்தவிதமான நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தச் சம்பவத்திற்கும் ஒருபோதும் மேற்கொள்ளப்படப் போவதுமில்லை.
எனவே இந்த தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பது ஒன்றும் மறைபொருள் அல்ல. இதனை நாம் நிச்சயமாக சர்வதேசத்திற்கும், வெளிநாட்டு சக்திகளுக்கும் சொல்வோம்.
ஜனநாயகம் பேசும் சிரித்த முகத்திரைக்குப் பின்னால், அடாவடியின் கோரமுகம் இருப்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளும் நாள் வரும், சொந்த மக்களின் நினைவுகளை கொண்டாட அனுமதியில்லாத தேசம், தன்னுடைய தாயை, தந்தையை, உறவுகளை பறிகொடுத்த நூற்றுக்கணக்கான பல்கலைகழக மாணவர்கள் இன்று படித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்த மனங்களில் மீண்டும் விசத்தை ஊற்றிக் கொண்டிருக்கும் ஜனநாயக வேடதாரிகள் இதற்கு நிச்சயமாக பதில் சொல்லவேண்டிவரும்,
இது வெறுமனே ஒரு பல்கலைக்கழக மாணவன் மீது வீழ்ந்த அடி அல்ல, இது தமிழ் இனத்தின் மீது வீழ்ந்த அடி, மக்கள் இதை உணர்ந்து கொண்டாகவேண்டும்,
மாணவ சமுகம் சோர்ந்து விடவேண்டாம், எங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லை, ஆயுதங்கள் பற்றி நாம் சிந்திக்கவில்லை, ஜனநாயக வரன்முறைக்குள் நின்று தொடர்ந்தும் உரக்க குரல் கொடுக்போம் உங்களின் பின்னால் நாம் இருப்போம் மக்கள் இருப்பார்கள். என்றுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten