தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 mei 2012

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் அகதிகள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது!


[ வியாழக்கிழமை, 24 மே 2012, 06:28.37 PM GMT ]
தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தைக் காட்டி காலவரையின்றி தடுத்து வைத்திருப்பதையிட்டு ஈழத்தமிழர் அகதியொருவர் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றில் தொடுத்துள்ள வழக்கினைத் தொடர்ந்து இவ்விவகாரம் மீண்டும் அவுஸ்திரேலிய ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை செயலர், அந்த துறைக்கான அமைச்சர், அவுஸ்திரேலியாவின் பொதுநலவாய் அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் அகதியின் சார்பில் இந்த வழக்கை தாக்கல் செய்த அகதிகள் மற்றும் குடிவரவுக்கான சட்ட நிலையம் எனும் அமைப்பு இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.
இதேவேளை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என இரு குழந்தைகளுடன் ஈழத்துப் பெண்ணொருவர் அவுஸ்திரேலியா புலனாய்வுப் பிரிவினரால் தடுப்பு முகாமுக்கு அனுப்புவதற்கு எடுத்துள்ள முயற்சியும் கவனத்தினைப் பெற்றுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten