[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 02:53.32 PM GMT ]
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் கோமாளிகளுக்கு விளக்கமளிக்கப் போவதில்லை. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் எந்தவொரு சவாலையும் சந்திக்க தயார் என தெரிவித்துள்ளேன்.
இது பற்றி ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலருக்கு தெளிவில்லை. நாம் ஒவ்வொருவரும் மன்னர்கள், ஒவ்வொருவரும் பிரஜைகள் என்ற கருத்தை மெய்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருவர் மட்டும் மன்னாராக ஆட்சி செய்து ஊழல் மோசடிகளை செய்வதனால் இந்த நிலைமையை எட்ட முடியாது. நாட்டை சுத்தப்படுத்துவதே எனது பிரதான இலக்கு.
இதற்கு அரசாங்கம் மெய்யான நோக்கத்துடன் ஒத்துழைப்பு வழங்கினால், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார். நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் செய்றபடும் எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படத் தயார்.
அதில் ஜனாதிபதி யார், பிரதமர் யார் என்பதனை கவனிக்க மாட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten