தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 mei 2012

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஊடக இணைப்பாளரின் மகன் காணாமல் போனாரா? கடத்தப்பட்டாரா? தற்போது வீடு திரும்பியுள்ளார்


[ சனிக்கிழமை, 26 மே 2012, 02:19.48 AM GMT ]
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஊடக இணைப்பாளரும் கலாசார உத்தியோகத்தருமான எஸ். பிரபாகரனின் 14 வயதுடைய மகன் அக்சையன் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
யாழ். சென்ஜோன் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்கும் நெல்லியடி மாணவனான அக்சையன் நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருக்கும் வழியில் காணாமல் போயுள்ளதாக, குறித்த மாணவனின் தந்தையான எஸ். பிரபாகரனால் முறையிடப்பட்டுள்ளது.
யாழ்.சென்ஜோன் மாணவனான அக்சையனைக் கண்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 021 222 222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு சிறுவன் பற்றிய தகவலைக் வழங்க முடியுமென பொலிசார் தெரிவித்தனர்.
அண்மையில் இந்திய ஆடைகள் வியாபாரி ஒருவர் இனம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தற்போது வீடு திரும்பியுள்ளார்.
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஊடக இணைப்பாளரும் கலாசார உத்தியோகத்தருமான எஸ். பிரபாகரனின் 14 வயதுடைய மகன்; அக்சையன் நேற்று பாடசாலை முடிந்த பின்னர் காணாமல் போயிருந்தார்
யாழ்.சென்ஜோன் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்கும் நெல்லியடி மாணவனான அக்சையன் நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருக்கும் வழியில் இனம் தெரியாத ஒருவரினால் துவிச்சக்கரவண்டியில் கட்டாயப்படுத்தப்ட்டு ஏற்றி கடத்தப்பட்டதாக தெரியவருகின்றது
துவிச்சக்கரவண்டியில் கட்டாயப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்ட அக்சையனை பின்னர் மோட்டார் வண்டியில் ஏற்றி கிளிநொச்சி வரை கொண்டு சென்ற கடத்தல்காரர் சற்று முன்னர் நல்லூர் பகுதியில் வைத்து விடுதலை செய்ததாக யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஊடக இணைப்பாளர் கலாசார உத்தியோகஸ்தர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட அக்சையன் கிளிநொச்சியில் அலுவலகம் போன்று இருந்த வீடொன்றில் நேற்று இரவு தங்கவைக்கப்ட்டுள்ளார்.
பின்னர் இன்று காலை மீளவும் மோட்டார் சைக்கிளில் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் வைத்து விடுதலை செய்ததுடன் கடத்தல்்காரர் 100 ரூபா பணத்தையும் கொடுத்து முச்சக்கரவண்டியில் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக அக்சயன் தெரிவித்ததாக எஸ். பிரபாகரன் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten