சாதாரண கவுன்சிலரின் நட்புக்கிடைத்தாலே, குதூகலிக்கும் இவர்களுக்கு, எம்.பிக்கள் அமைச்சர்களின் நட்புக் கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள் ? அதிலும் லேபர் கட்சியில் அங்கம் வகிக்கும் சென் கந்தையா மற்றும் சுகந்த குமார் ஆகியோர் தமது சொந்த நலனுக்காக தற்போது லண்டனில் பெருங் குழப்பங்களை உண்டுபண்ணியுள்ளார்கள். இவர்கள் அந்த BTF ஸ்தாபகர்களான 11 பேரில் அடங்குவார்களாம். இவர்கள் BTF இல் எந்த ஒரு வேலைத் திட்டத்தையும் எடுத்துச் செய்வது கிடையாது. எப்போதும் மேட்டுக்குடி மக்களைப்போல, உயர் மட்டத்தில் இருந்து பழக்கமாகிவிட்டார்கள். இதேவேளை 2009ம் ஆண்டிற்குப் பின்னர் BTF, மக்கள் மயப்படுத்தப்பட்டது ! பல இளையோர்கள் உள்வாங்கப்பட்டார்கள் ! பல செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக ஜெனீவாவில் நடந்த அமெரிக்க பிரேரணையின் போது BTF இன் அடிமட்டத் தொண்டர்கள் மாதக்கணக்காக அங்கே தங்கி நின்று பல வேலைகளைச் செய்தார்கள் !
இதனால் BTF லும் சரி மக்கள் மத்தியிலும் சரி, வேலைத்திட்டங்களைச் செய்யும் நபர்களின் செல்வாக்கு ஓங்கியது. இதனைப் பொறுக்க முடியாத இந்த 11 BTF ஸ்தாபகர்களில் சிலர், BTF தமக்கு கீள் தான் இயங்கவேண்டும் எனவும், அதனை தற்போது நடத்திவருபவர்கள் தமக்கு கீள் தான் வேலைசெய்யவேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்து, அது பலிக்காமல்போக இறுதியில் பிரிந்தும் சென்றனர். BTF இன் கொள்கைக்கு ஒத்துவராத சுகந்தகுமார் போன்றவர்களை, BTF வெளியேற்றியும் இருந்தது. BTF இல் இருந்து விலக்கப்பட்ட நிமலன் சீவரட்னம், அவர் தங்கை, காசுப் பிரச்சனையில் சிக்கிய ஸ்கந்த, சுகந்தகுமார், எனச் சிலர் அதிருப்த்தியில் இருக்க, எரியும் நெருப்பில் சூப்பர் பெற்றோலை வார்ப்பதுபோல சங்கீதன் கோஷ்டி இவர்களை கையாள ஆரம்பித்துள்ளது ! சந்தர்ப்பம் பார்த்து களமிறங்கிய சங்கீதன் என்னும் குள்ளநரி, குழப்பங்களை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இதனையே அவர்கள் மாவீரர் தினத்திலும் செய்து முடித்தார்கள் ! சரி அவர்கள் தான் இலங்கை அரசின் வேலைத்திட்டத்தின் கீள் இவ்வாறு செய்கிறார்கள் என்றால், கோட்டும் சூட்டும் போட்டு, தாம் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் என்று சொல்லித் திரியும் சில BTF ஸ்தாபகர்களுக்கு எங்கே போனது அறிவு ? எல்லாம் பதவி மோகம் ! BTF இன் தலைமைப் பதவியில் நான் தான் இருக்கவேனும் என்ற நப்பாசையில், சங்கீதன் விரிக்கும் மாயவலையில் விழுந்து, முள்ளிவாய்காலில் இறந்த மக்களுக்காகச் செய்யும் நினைவு தினத்தில் கூட விளையாட ஆரம்பித்துவிட்டார்கள் இவர்கள். BTF இன் ஸ்தாபர்கள் 11 பேரில், சிலர் நேற்றைய தினம் ஒரு கூட்டத்தைக் கூட்டி, தாமே BTF இன் ஏகபோக தலைமை என அறிவிக்க இருந்தனர். இக் கூட்டத்தில் சங்கீதன் அடியாட்கள், ஸ்கந்தாவின் அடியாட்களும் களமிறக்கப்பட்டனர். பிறரைப் பேசவிடாது அவர்கள் போட்ட கூப்பாட்டை நீங்களும் பார்க்கவேண்டாமா ?
இதோ பாருங்கள் ! வீடியோவை !
தலைமை பதவிவேண்டும் என்று, சென் கந்தையாவும், சுகந்தகுமார் ஆட்களும் மற்ரும் சங்கீதன் கோஷ்டியும் சேர்ந்து அடிக்கும் லூட்டியைப் பாருங்கள் ? பதவி மோகத்தில் அலையும் இவர்களும், எங்கடா காப் கிடைக்கும் அதில் கடாவெட்டலாம், எல்லாத்தையும் சுருட்டிப்போடலாம் என்று அலையும் சங்கீதன் கோஷ்டியா தமிழ் மக்களுக்கு விடிவு பெற்றுத் தரப்போகிறார்கள் ? இல்லை சுதந்திரம் அடைய வழிவகுக்கப்போகிறார்கள் ? BTF அமைப்பில் அடிப்படை உறுப்பினர்களாக இருந்து, வீதிகளில் இறங்கிவேலைசெய்யும் நபர்களும், அதற்கு உண்மையாக உழைக்கும் அடிமட்டத் தொண்டர்களுமே, தமிழ் மக்களுக்குத் தேவையானவர்கள் ! அவர்கள் கரங்களையே நாம் பலப்படுத்தவேண்டும் ! அதை விடுத்து தமது சொந்தப் பகைக்கும், தமக்குப் பிடிக்கவில்லை என்பதனால் வெளியேறி BTF ஐ உடைக்க நினைப்பவர்களையும் என்றும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் !
வெறுமனவே தலைவர் என்ற பதவியில் தான் இருக்கவேண்டும், தனக்கு கீள் தொண்டர்கள் எல்லாம் செய்யவேண்டும், ஆனால் பெயர் மட்டும் எனக்குத் தான் என்று, கேவலமான இந்திய சாக்கடை அரசியலை, லண்டனிலும் இவர்கள் புகுத்த தமிழ் மக்கள் அனுமதியளிக்கக்கூடாது ! BTF ஐ நல்ல முறையில் தற்போது வழிநடத்திச் செல்லும் உறுப்பினர்கள், முள்ளிவாய்க்கால் தினத்தை லண்டன் நகரின் மையப் பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். வேற்றின மக்கள் மற்றும் வேற்று நாட்டு உல்லாசப் பயணிகள் கூடும் இடத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடத்தப்படவேண்டும். அப்படி என்றால் தான் எமது சொந்தங்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்ட செய்தியை நாம் உலகிற்கு கொண்டுசெல்ல முடியும் ! சத்தம் இன்றி கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எம்மின மக்களின் சோகங்களை நாம் உலகிற்குச் சொல்லவேண்டும் ! இதனை உலகம் ஒரு நாள் உணர்ந்துகொள்ளவேண்டிய நிலை தோன்றும். அதுவரை எமது போராட்டம் ஓயாது !
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !
அதிர்வுக்காக:
வல்லிபுரத்தான்:
Geen opmerkingen:
Een reactie posten