[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 12:47.00 PM GMT ]
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்த செயற்திட்டம் குறித்த சில தகவல்களை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துரையாடுவதற்கான 33 பிரதான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இந்த செயற்திட்டத்தில் முன்மொழிந்துள்ளது.
இந்தப் பரிந்துரைகள் குறித்து உயர்மட்ட அரசியல் விவாதங்கள் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளதாக இலங்கை கருதுகிறது.
அரசியலமைப்பில் திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதென்பதால், நாடாளுமன்றத்தின் தலையீடு அவசியம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் கையளித்துள்ள இந்த ஆவணத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய கொள்கை, மோதலின் இறுதிக்கட்டம், மனிதஉரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு கரிசனைகள், மீள்குடியமர்வும் அபிவிருத்தியும் ஆகியனவே அந்த நான்கு பிரிவுகளாகும்.
இறுதிக்கட்ட மோதல் பற்றிய பரிந்துரைகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் கையாளவுள்ளன.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருத்தமான பொறிமுறைகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு திட்டமிடும் அதேவேளை, தேவைப்பட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விவாதத்துக்கும் அனுப்பும்.
மனிதஉரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு விடயங்களுக்கு இந்த ஆவணத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten