பலாலி இராணுவத் தளபதி, ஹத்துறுசிங்ஹ யாழ் இந்தியத் துணைத்தூதுவர் வி.மகாலிங்கத்தை திட்டித்தீர்த்துள்ளார். பலாலி விமானப்படைத் தளத்தில் முள்ளிவாய்க்கால் வெற்றிக்கழிப்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் முதல்வரிசையில் உள்ள ஆசனம் ஒன்றை இராணுவத்தினர், மகாலிங்கத்துக்கு ஒதுக்கியுள்ளனர். அத்துடன் மகாலிங்கம் அவர்கள் மேடை ஏறிப் பேசுவதாக இருந்ததாம். ஆனால் திடீரென அவர் உரை ரத்துச் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் தமிழர் கொல்லப்பட்டது தொடர்பாக திரு.வி.மகாலிங்கம் ஏற்கனவே கருத்துகள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவரைப் பேசவிட்டால் அவர் தமிழர்கள் கொல்லப்பட்ட கருத்தை முன் நிறுத்திப் பேசக்கூடும் என இராணுவம் அஞ்சியுள்ளதாம்.
இதனை அடுத்து வி.மகாலிங்கத்தை, இராணுவத்தின் உயர் அதிகாரிகள் விழாவில் வைத்து புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் மகாலிங்கம் அவர்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். விழா நடைபெற்று முடியும் தறுவாயில் இருந்தபோது, அங்கே வந்த ஹத்துறுசிங்ஹ திடீரென மகாலிங்கத்தோடு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் வெடித்தது. இறுதியில் எதுவும் பேசாது மகாலிங்கம் அவர்கள், தனது ஆசனம் இருக்கும் இடம்சென்று அமர்ந்துகொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten