தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர் ஜீன் லெம்பர்ட் கோரியுள்ளார். ஐ.ஏ.என்.எஸ் இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அவசகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல தமிழ் கைதிகள், இன்னும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான அரசியல் கைதிகள் தற்போது விடுதலை கோரி உணவுத் தவிர்ப்பில் ஈடுப்பட்டுள்ளமையையும், ஜீன் லெம்பர்ட் சுட்டிக்காட்டியுள்ளதாக, ஐ.ஏ.என்.எஸ் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
http://uktamilnews.blogspot.com/2012/05/blog-post_8785.html?spref=fb
Geen opmerkingen:
Een reactie posten