தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 11 mei 2012

பொறுங்கள் சிங்க கொடி சம்பந்தனும் ஏதோ கூறப்பார்க்கிறார்- டக்ளஸ் கிண்டல் !



நாடாளுமன்றத்தில் நேற்று மாவை சேனாதிராசா சமர்ப்பித்த வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சபை களேபரமாக காணப்பட்டது. அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தனது கட்சி உறுப்பினர்களை பார்த்து கையை அசைத்து உறுமிக்காட்டினார். அப்போது பொறுங்கள், பொறுங்கள் சிங்கக் கொடி சம்பந்தனும் ஏதோ கூறப்பார்க்கிறார். சிங்க கொடியைப்பற்றி விளக்கம் சொல்லப்பார்க்கிறார். கொடியுடன் வந்திருக்கிறாரா அல்லது���� வந்திருக்கிறாரா என டக்ளஸ் கிண்டல் அடித்தார்.

சிங்க கொடி என்றதும் கிளுகிளுப்படைந்த சம்பந்தன் டக்ளஸின் கிண்டலைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது பின்வரிசையில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அருகில் உள்ள தனது சக நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஐயா சிங்க கொடியை தானாம்��..மாக கட்டுகிறார் என இரகசியமாக சொல்லி சிரித்தனர். மாவை சேனாதிராசா சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்தில் டக்ளஸ் உரையாற்றும் போது கள்ளருக்கும் கொள்ளையருக்கும் வாதாடும் வழக்கறிஞரும், மண்டையன் குழுவின் புள்ளியும், பல் பிடுங்கிய பாம்புகளும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதாக நக்கல் அடித்தார். இலங்கை-இந்திய ஒப்பந்தம் பொன்னான சந்தர்ப்பமாகும். அதனையும் தவறவிட்டு விட்டீர்கள். இங்கிருக்கின்ற மண்டையன் குழு தலைவர் புலிகளின் பெயரால் தினம் தினம் கொலைசெய்துகொண்டிருந்தார் இன்று பல் பிடுங்கிய பாம்புபோல இருக்கின்றார்.

கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள், பிரச்சினை தீர்ந்தால் உங்களுக்கு அரசியல் இல்லை. பிரச்சினை இருந்தால் தான் உங்களுக்கு அரசியல், களவு எடுக்காவிடின் உங்களுக்கு வழக்கு இல்லை. களவை ஊக்குவித்தால் தான் உங்களுக்கு வழக்கு. அதனால் ஊக்குவிக்கும் வேலைகளையே நீங்கள் செய்கின்றீர்கள் என்று சுமந்திரன் எம்.பி.யை பார்த்து கூறினார். அப்போது சுமந்திரன் எம்.பி. ஏதோ கூறுவதற்கு முயற்சித்த போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமந்திரனைப் பார்த்து பெண்கள் பாடசாலையில் என்ன செய்தீர்கள் என்று சபையில் சொல்லட்டுமா என கேட்டார். கள்வருக்கும் கொள்ளையருக்கும் வழக்குப் பேசிப் பேசி வயிறு வளர்க்கின்றீர்கள். மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒத்துழையுங்கள் என டக்ளஸ் தெரிவித்தார்.

அப்போது மாவை சேனாதிராஜா எம்.பி. ஏதோ கூறுவதற்கு முயற்சிக்கையில் இடைமறித்த டக்ளஸ் நான் உமக்கு என்ன சொல்கிறேன் என்றால் குடும்பமே வெளிநாட்டில் இருக்கின்றது. நீரோ இங்கு அகதியாய் இருக்கின்றேன், அகதியாய் இருக்கின்றேன் என்று கண்ணீர் வடிக்கின்றீர். உங்களுடைய வீட்டை விற்றுவிட்டு இங்கே வந்து அகதி அகதியென்று கொக்கரிக்கின்றீர்கள் என டக்ளஸ் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten