தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 mei 2012

முன்னாள் போராளிகளை கைது செய்யும் நடவடிக்கைக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி!


[ வியாழக்கிழமை, 24 மே 2012, 04:15.45 PM GMT ]
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை விசாரணை என்ற போர்வையில் கைது செய்வதை மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க முடியாது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை திருமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று, மாவடிச்சேனை எல்லைக் கிராமங்களில் வீடுகளிற்கு சென்று ஜவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல், கதிரவெளி பகுதிகளில் கைதுசெய்வதற்கு வீடுகளிற்கு சென்றுள்ளனர்.
யாரையும் கைது செய்யவில்லை வீட்டிலிருந்தவர்ளை மிரட்டி சென்றுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவ்வாறான செயற்பாட்டால் பல கிராமங்கள் அச்சத்தில் உறைந்துள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten