2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதிவரை, தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இறுதியாக நின்ற தருணம் அது ! தமது ஆயுதங்களை மெளனிப்பதாக புலிகள் தெரிவித்த நாட்களும் அவையே ! இலங்கை இராணுவத்தால் முற்றாகச் சூழப்பட்ட நிலையில், புலிகளின் பல மூத்த தளபதிகள் தாமே தம்மை மாய்த்துக்கொண்டனர் ! அதுவரை போராடி வீர காவியம் ஆகிய மாவீர்களை புலிகளின் தலைமை மறந்துவிடவில்லை. மாவீர்களின் வித்துடல்களை எஞ்சியிருந்த போராளிகள் முள்ளிவாய்க்காலில் வித்திட்டனர் ! புதைக்கப்பட்ட இடங்களில் பெயர் பலகை வைக்க எஞ்சியிருந்த போராளிகள் கடும் பிரயத்தனம் செய்துள்ளனர்.
இதுதான் சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட முள்ளிவாய்க்காலின் ஒரு பகுதியாகும். பல இடங்களை இராணுவத்தினர் தோண்டி, அங்கே புதையுண்டு இறந்த மக்களின் உடலங்களை எடுத்து அகற்றிவிட்டனர். ஆனால் இப் பகுதியை இராணுவம் இன்னும் முற்றாக அழிக்கவில்லை ... இதன் காரணம் என்னவென்று தெரியவில்லை. சில வேளைகளில் தற்போது இவ்விடம் அழிக்கப்படும் இருக்கலாம். ஆனால் புகைப்படம் எடுக்கப்பட்ட சில மாதங்கள்வரை இப் பகுதி புகைப்படத்தில் காணப்படுவதுபோலவே இருந்தது.
இங்கே காணப்படுவது மண் திட்டிகள் அல்ல ! பல நூறு வித்துடல்கள் ! நாட்டிற்காகப் போராடி வீழ்ந்த வேங்கைகளில் உடல்கள், இங்கே விதைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் எமது ஆயுதப் போராட்டம் மெளனமானது ! ஆனால் இந்தப் போராட்டத்தை புலம்பெயர் தமிழர்கள் கையில் எடுத்து, அதன் வடிவதை மாற்றி போராடி வருகிறார்கள் ! இதனையே தேசிய தலைமையும் இறுதியாக எமக்கு விட்டுச் சென்றது !
Geen opmerkingen:
Een reactie posten