[ ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2012, 01:47.17 AM GMT ]
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் அலன் பொஸ்டன், இந்த தகவலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.
எனினும், இது தொடர்பான எவ்வித அறிவி;த்தல்களும் தமக்கு கிடைக்கவில்லை என்று நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய பிராந்திய தகவல்துறை நிபுணர், சாந்திரா மச்சாரியா இது தொடர்பில் கூறும்போது, தாம் கொத்துக்குண்டு தொடர்பான தகவலை செய்திதாள்களிலேயே தெரிந்துக்கொண்டதாக குறிப்பிட்டார்.
எனினும், தமது கொழும்பு அலுவலகம் இதனை தமக்கு அறிவிக்கவில்லை என்ற மச்சாரியா தெரிவித்தார்.
இந்தநிலையில், குறித்த தகவல் குறித்து முதலில் செய்தியை வெளியிட்ட அலன் பொஸ்டன், தமது தலைமையகத்தின் அனுமதியின்றி தகவல் எதனையும் வெளியிடமுடியாது என்று குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten