[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 02:47.34 AM GMT ]
அந்தக் கேள்விக்கு அவரால் சரியான முறையில் பதிலளிக்க முடியவில்லை.
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்க அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுடனும் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சில குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டவர்களும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டியுள்ளவர்களும் மாத்திரமே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த அவர், இங்கு அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
இந்த வேளையில் குறிப்பிட்ட பத்திரிகையாளர் ஒருவர், அப்படியானால் கே.பி. ஒரு அரசியல் கைதியா? இல்லையா? எனக் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் தடுமாறினார். பின்னர், பெயர் அடிப்படையிலான தகவல்கள் தம்மிடம் இல்லாததால் அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பாக சாட்சியங்களை சமர்ப்பித்து தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டுவருவதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான குற்றப்பத்திரிகைகளை நீதிமன்றம் விசாரித்து அவர்களை நிரபராதிகள் என தெரிவித்து விடுதலை செய்தால் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் 359 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் 309 சந்தேகநபர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த இரண்டுப் பிரிவுகளில் கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எந்தப் பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ளார் என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன, பெயர் அடிப்படையிலான தகவல்கள் தம்மிடம் இல்லாததால் அது தொடர்பாக கருத்து வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ருத்ரகுமாரனுக்கு அமெரிக்கா அடைக்கலம் வழங்கியுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 03:08.10 AM GMT ]
புலிகளின் தலைவர் பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றச் செயல்களுடன் ருத்ரகுமாரனுக்கு தொடர்பு காணப்படுகின்றது.
ருத்ரகுமாரன் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்தில் ருத்ரகுமாரன் ஐந்து தடைவகள் இலங்கைக்கு விஜயம் செய்து, பிரபாகரனுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரபாகரனின் சட்ட ஆலோசகராகவும் ருத்ரகுமாரன் கடமையாற்றியுள்ளார் என திவயின குற்றம் சுமத்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten