தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 mei 2012

லண்டனில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் தமிழ் மாணவன் முருகேசப்பிள்ளை கோபிநாத்.


லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்காக, போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஏந்தப்படும் தீபத்தினை ஏந்துவதற்காக தெரிவானவர்களுள் பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவன் ஒருவனும் தெரிவாகியுள்ளான்.

முருகேசப்பிள்ளை கோபிநாத், வயது 21. மல்லாவியைச் சேர்ந்த இம்மாணவன் நியூகாஸ்டல் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ பீடத்தில் கல்விபயின்று வருபவர்.

ஒலிம்பிக் வரவேற்பு நடைபெற்ற போதும் எத்தனையோ மொழிகளுக்குள்ளும் முதலில் ��வணக்கம்�� என தமிழிலேயே ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இத் தீபம் அலுமினியத்தில் செய்யப்பட்டுள்ளது. இத்தீபத்தில் 8000 துவாரங்கள் போடப்பட்டு இருக்கின்றன.

8000 துவாரங்கள் போடப்பட்டுள்ள இத்தீபத்தினை 8000 வீரர்கள் 8000 மைல்கள் ஓட இருக்கின்றார்கள். அவர்களுள் ஒருவர் மேற்படி தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய விடயம்.

இத்தீபத்தை ஏந்துவதற்காக தன்னையும் தெரிவுசெய்தமையால் தான் ஆச்சரியப்பட்டதாகவும் நன்றி கூறியதாகவும் கோபிநாத் தெரிவித்திருந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten