இன்று காலை மாணவர் ஒன்றியச் செயலாளர் யாழ்.கலட்டிச் சந்தியில் வைத்து இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டார்.
இதனைக் கண்டித்தும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு வழங்கக் கோரி மாணவர்கள் துணைவேந்தரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நூற்றுக்கணக்கில் ஒன்று கூடிய மாணவர்கள் துணைவேந்தருக்கு எதிராக கோஷங்களை எழப்பியதோடு துணைவேந்தரது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி தாக்கினார்கள்.
மேலும் துணைவேந்தரது உருவப்படம் ஒன்றை வரைந்து அதனையும் தீயிட்டு எரித்தனர். அத்தோடு தமக்கான பாதுகாப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் தொடர்ச்சியாக கோஷமிட்டவண்ணம் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அழைத்து துணைவேந்தர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது பல்கலைக்கழக சசூழலில் அதிகளாவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் கடும் பதற்றம் நிலவுகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten