யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் புலிக் கொடிகளை ஏந்திய நபர்கள் கலந்து கொண்டதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய மே தினப் பேரணியில் சிலர் புலிக்கொடிகளை ஏந்திச் சென்றதாக புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய இணையத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களில் புலிக் கொடிகள் ஏந்திச் செல்லப்பட்டதனை புலி ஆதரவு இணையத்தளங்கள் உறுதி செய்துள்ளன.
இதேவேளை, கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பு மே தினக் கூட்டத்தில் உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
தமிழ் மக்களை ஆதரிப்பதாகத் தெரிவித்து சுதந்திரப் போராட்டம் அழிக்கப்பட்டது என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியில் குறிப்பிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten