கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் றிசாட் பதியுதீன் இதனை தெரிவித்தார். இதேவேளை அமைச்சர் றிசாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் தமிழர்களின் காணிகளை அபகரித்து முஸ்லீம்களை குடியேற்றி வருவதை எதிர்த்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் மன்னார் கத்தோலிக்க குரு முதல்வர் உட்பட ஐந்து குருக்களை மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் சமூகமளித்துள்ளனர்.
மன்னார் ஆயர் ஏற்கனவே சிறீலங்கா அரச புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களால் அநாவசியமாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
மன்னார் � தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராமத்தில் உள்ள மன்னார் ஆயர் இல்லம் மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான சுமார் 600 ஏக்கர் காணியை அமைச்சர் றிச்சாட் பதியுதீனின் சகோதரர் அபகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten