தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 20 mei 2012

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது வைகோ, கொளத்தூர் மணி, சத்யராஜ் .(படங்கள் & காணொளி)!


இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது,ஈழவிடுதலை மலரும்வரை இந்தமுழக்கம் ஓயாது.ஜ.நாவே! இந்தியஅரசே! ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து என்ற உரிமை முழக்க பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜீ.ஆர் நகரில் இடம்பெற்றுள்ளது.

பெரியார் திராவிடக்கழகத்தின் ஏற்பாட்டில் சென்னையில் உள்ள எம்.ஜீ.ஆர் நகர்பகுதியில் பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் இனஎழுச்சி பாடல்களுடன் தொடங்கியது.

பெரியார் திராவிடக்கழக துணைத்தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்
கருத்துரைகளை பெரியார் திராவிடகழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்,பெரியார்திராவிடக்கழக கோவை பொதுச்செயலாளர் இராமகிருட்டினன்,உள்ளிட்ட இனஉணர்வாளர்களுடன்,பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி,இனமான நடிகர் சத்தியராஜ் ஆகியோர் சிறப்பு கருத்துரைகளை நிகழ்த்தினார்கள்,உரிமைமுழக்க உரையினை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிகழ்தினார் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இனஉணர்வினை வெளிப்படுத்தினார்கள்.





Geen opmerkingen:

Een reactie posten