Announcing the sentence U.S. District Judge Raymond Dearie of the US District Court for Eastern District of New York in Brooklyn casted doubt on the government's case calling the 20-year sentence the prosecutors were seeking is excessive.
விடுதலைப் புலிகள் ஆயுதம் வாங்க, நிதிசேகரித்தார் என்ற குற்றத்துக்காக, அமெரிகாவில் 4 தமிழர்கள் கைதுசெய்யப்பட்ட செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்ததே. சாதாரண ஆயுதங்களை கொள்வனவு செய்யச் சென்ற இவர்களை, அமெரிக்க உளவுத்துறையான FBI பிந்தொடர்ந்து இவர்களுக் ஆசைகாட்டி தரையில் இருந்து விமானத்தை தாக்கும் ஏவுகணைகளை விற்க முயற்சிசெய்தனர். இதனூடாக கனரக ஆயுதங்களை இவர்கள் வாங்க முற்பட்டார்கள் என FBI இவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்தது. இதில் கந்தசாமி என்பவர் தாம் நிதிசேர்த்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் அமெரிக்க அரச தரப்பு வக்கீல் செய்த ஒரு திருவிளையாடல், நீதிபதியின் மனதையே மாற்றிவிட்டது ! ஆம் தற்போது கந்தசாமி விடுதலையாகிவிட்டார்.சரி வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !
2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடைபெற்றுவரும் இவ்வழக்கில், ஆரம்பத்தில் இருந்தே அரச தரப்பு வக்கீல் மிதமிஞ்சிய வகையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடைசெய்துள்ளது என்றும் அவர்கள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த கந்தசாமியின் வழக்கறிஞர், புலிகள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தவில்லை என்று குறிப்பிட்டார். 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டுப் பகுதியில் அமெரிக்கா விடுதலைப் புலிகளை அழிக்கவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வந்ததாக கந்தசாமியின் வக்கீல் சுட்டிக்காட்டினார். இதற்கான சில ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார்.
குற்றஞ்சுமத்தப்பட்ட நபர், தமிழர் புணர்வாழ்வுக்கழகத்துக்கே நிதிசேகரித்ததாகவும், ஆனால் அவ்வமைப்பையும் அமெரிக்கா தடைசெய்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனிடையே குறுக்கிட்ட அரச தரப்பு வக்கீல், தமிழர் புணர்வாழ்வுக்கழகம் புலிகளின் அமைப்பு என்று வாதிட்டார். எனவே அதற்கு பணம் சேர்ப்பது புலிகளுக்கு பணம் சேர்ப்பதற்கு ஒப்பானது என்றும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேர்த்ததால் கந்தசாமிக்கு 20 வருட அதிகூடிய சிறைத்தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் அரச தரப்பு வக்கீல் படு ஆக்ரோஷமாக வாதிட்டார். 20 வருடங்கள் என்பது ஆயுள் தண்டனைக்கு சமமானது. அமெரிக்க மண்ணில் அல்-கைடா தீவிரவாதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஒப்பான ஒரு தண்டனையை அரச தரப்பு வக்கீல் கோரியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அரச தரப்பு வக்கீல் ஒரு 10 வருடம் வழங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தால் கூட நீதிபதி சற்று சிந்தித்திருப்பார். ஆனால் இவர் கோரிய தண்டனைக் காலத்தை ஏற்கவே முடியாது என்றும், இது மிகவும் சந்தேகத்துக்கு இடமாக உள்ளதாகவும் நியூயோர்க் சமஷ்டி நீதிமன்ற நீதவான் டேயறி கூறினார். புலிகளுக்கு சேர்த்ததாகக் கூறப்படும் கந்தசாமி இந் நிதியை இராணுவ ரீதியில் பயன்படுத்த சேகரிக்கவில்லை என்றும், அதனை அவர் தனது நாட்டு மக்களுக்கு அனுப்பிவைக்கவே முனைந்துள்ளார் என்றும் நீதவான் டேயறி தெரிவித்தார். அத்தோடு தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவில் எந்தவிதமான ஒரு பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை என்பதனையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அரச தரப்பு வக்கீல் மிக மிக அதிகமான தண்டனையைக் கோரியுள்ளார் என்று தெரிவித்த நிதிபதி டேயறி, கந்தசாமி இதுவரை அனுபவித்த சிறைவாசமே போதுமானது என்றும் அவரை தாம் விடுதலை செய்வதாகவும் தனது தீர்ப்பைக் கூறியுள்ளார். இத் தீர்ப்பானது அமெரிக்க FBI உளவுத்துறையினருக்கு கிடைத்த படுதோல்வியாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் இந்த வழக்கு பயங்கரவாதிகள் யார் விடுதலைப் போராளிகள் யார் என்று மேற்குலகம் பிரித்துப் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளது எனலாம் !
Geen opmerkingen:
Een reactie posten