தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 mei 2012

நல்லிணக்கம் தொடர்பில் பரந்துப்பட்ட திட்டம் ஒன்றை இலங்கை சமர்ப்பித்துள்ளது: அமெரிக்கா

[ சனிக்கிழமை, 19 மே 2012, 12:36.34 AM GMT ]
நல்லிணக்கத்துக்காக இலங்கை அரசாங்கம் மிகவும் பரந்துப்பட்ட, தீவிரமான திட்டம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ரொட்ஹெம் கிளிங்டனை, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று 18 ஆம் திகதி நியூயோர்க்கில் சந்தித்த போது இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.
இந்தநிலையில், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையிடம் இருந்து அமெரிக்கா முன்னேற்றமான நிலைப்பாட்டை எதிர்ப்பார்ப்பதாக ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,
இலங்கையின் சார்பில் நடவடிக்கை திட்டம் எவையும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் பரந்துப்பட்ட படிமுறைகள் ஹிலாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
எனினும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நூல்னட் செய்தியாளர்களிடம் பேசும் போது,
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடைமுறை குறித்து, அமைச்சர் பீரிஸ் காத்திரமான திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவெளை, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் அதேபோல போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் என்பன ஒரே தடவையில் தெளிவான நிலையில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ஹிலாரி வலியுறுத்தினார். இதுவே இலங்கையின் முன்னேற்றதுக்கு வழிவகுக்கும் என்றும் ஹிலாரி சுட்டிக்காட்டினார்.
வடக்கின் போர் வலயங்கள், மாகாணசபைத் தேர்தலை நடத்துதல், மனித உரிமைகளை பாதுகாத்தல், போன்ற விடயங்களில் இலங்கை கவனம் செலுத்தவேண்டும் என்றும் ஹிலாரி வலியுறுத்தியுள்ளார்.
இச்சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹிலாரி கிளிங்டனும் ஜி.எல்.பீரிஸும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து கருத்துரைத்தனர்.
இதன்போது அமைச்சர் பீரிஸுடன் காத்திரமான கலந்துரையாடல் ஒன்றை தாம் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாக ஹிலாரி கிளிங்டன் தெரிவித்தார்.
http://news.lankasri.com/show-RUmqyFSdOVfo4.html

http://news.lankasri.com/show-RUmqyFSdOVfq0.html


பீரிஸ் - ஹிலாரி பேச்சு குறித்து விக்ரோரியா நூலன்ட் விளக்கம்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 04:53.28 AM GMT ] [ புதினப்பலகை ]
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் விளக்கமளித்துள்ளார்.
வாசிங்டனில் நேற்று நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த விளக்கங்கள் வருமாறு-
கேள்வி - இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இன்றுகாலை இராஜாங்கச் செயலர் நடத்திய சந்திப்பு குறித்து தெளிவுபடுத்த முடியுமா? 
நூலன்ட் - இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இராஜாங்கச்செயலர் இன்றுகாலை 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மிகவும் முக்கியமான – நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விரிவான அணுகுமுறை, அதைப் பகிரங்கப்படுத்துவது குறித்த அரசின் திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தார்.
தனியே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது மட்டுமன்றி, உண்மையான வெளிப்படைத்தன்மை, திறந்த, பொதுவான செயற்பாடு அவசியம் என்று இராஜாங்கச்செயலர் ஊக்கப்படுத்தினார்.
பொறுப்புக்கூறலையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நல்லிணக்கத்தை பலப்படுத்த இலங்கைக்குள்ளேயும் வெளியேயும் பொது நம்பிக்கையை ஏற்படுத்தும் நகர்வுகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம் என்றும் அவர் கூறினார்.
தற்போது இதனை நீங்கள் இதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
நடைமுறைப்படுத்துவது தொடர்பான உறுதியான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை உங்கள் மக்களுக்கு, உலகிற்குக் காட்ட வேண்டிய அவசியம் தற்போது உள்ளது.
வடக்கில் படைக்குறைப்பு, வடக்கு மாகாணசபைக்கான தேர்தல், மனிதஉரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுவான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எப்போதும் போலவே வலியுறுத்தினார்.
ஈரானின் மசகு எண்ணெயில் சார்ந்திருப்பதை குறைப்பதற்கான இலங்கையின் நகர்வுகள் குறித்தும், அவர்கள் கருத்துகளைப் பரிமாறினர். இந்த விடயத்தில் இலங்கை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் ஊக்குவித்தோம்.
கேள்வி - பொறுப்புக்கூறுதல் பற்றிக் குறிப்பிட்டபோது, போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட - போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகள் குறித்து அவர் பேசினாரா?
நூலன்ட் - நாம் பொறுப்புக்கூறல் என்று பேசும்போது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாகவே அர்த்தம்.
கேள்வி - எனக்குத் தெரியும், ஆனால் அவர் (ஹிலாரி) எப்படி அதுபற்றிக் கேட்டார்?
நூலன்ட் - அவர் பொதுவான சொற்களிலேயே பேசினார். பொப் பிளேக், மைக் போஸ்னர் ஆகியோருடன் அவர்கள் விரிவாகப் பேசுவதற்கு தனியான சந்திப்புகள் இருந்தன.
கேள்வி - பொதுச்சந்திப்பிலும், தனிப்பட்ட சந்திப்பிலும், அவர்கள் பேசுவதற்கு செலவிட்ட நேரம் அதிகமா?
நூலன்ட்- இல்லை.
கேள்வி - எனவே, அது ஏறத்தாழ சமம் என்கிறீர்களா?
நூலன்ட் - அவர்கள் பொதுவாக 10 நிமிடங்கள் பகிரங்கமாகவும், தனியாக 35 நிமிடங்கள் தனியாகவும் பேசினார்கள்.
கேள்வி - 10 நிமிடங்கள் நடந்த பகிரங்க சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தான் பேசுவதற்கு எட்டரை நிமிடங்களை எடுத்துக் கொண்டாரே. அவர் தனிப்பட்ட அட்டவணையில் ஆதிக்கம் செலுத்தியதாக கருதுகிறீர்களா?
நூலன்ட் – இல்லையில்லை.... அது ஒரு சமமான கலந்துரையாடல்.


Geen opmerkingen:

Een reactie posten