[ சனிக்கிழமை, 26 மே 2012, 09:40.43 AM GMT ]
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பொன்றால் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்திற்கு என்னை சம்பந்தப்ப்படுத்தி வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டுவர விரும்பகின்றேன்.
பாராளுமன்றத்தில் என்னால் ஆற்றப்பட்ட உரையினை குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது அரசியல் வங்குரோத்து நிலையினை மறைப்பதற்கு மேற்கொண்டுள்ள ஒரு அரசியல் பாதையென கருதுகின்றேன்.
மன்னார் ஆயர் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்றும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கை விடுகின்றனர். என்னில் எந்த பிழையும் இல்லை, இதனை தெளிவாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளேன்.
எமது தரப்பு நியாயங்களை சொல்ல கத்தோலிக்க திருச்சபை அமைந்துள்ள வத்திக்கானுக்கும் செல்லவும், மனித உரிமை குறித்து ஜெனீவாவுக்கும் சென்று சொல்வேன் என்பதை அறிவித்துள்ளேன்.
மன்னாரில் இடம் பெயர்ந்த அமைப்பு என்று முகவரியிடப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் என்ற அனாமதேய அமைப்பு அறிக்கைகளை விட்டுவருவது குறித்து எனது கண்டனத்தை வெளிப்படுத்த விரும்புகின்றேன்.
தமிழ் மக்களை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில், முஸ்லிம்களுடனான தமிழர்களின் உறவை சீர்குலைப்பதில் இந்த மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் அமைப்பு முன்னணியில் இருப்பதை காணமுடிகின்றது.
சமூக ஆர்வலர் அமைப்பு குறிப்பாக ஒரு சமூகத்தை மற்றும் பிரதி நிதித்துவப்படுத்துவனவாகவே அமைந்துள்ளதை அவர்களது அநாகரிமான எழுத்துக்களிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகின்றது. எனவே இது சமூக ஆர்வலர் அமைப்பாக இருக்காது என்பதும் எனது கருத்தாகும்.
இவ்வாறான சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு என்றும் முன்வந்ததில்லை, அவர்கள் தொடர்ச்சியாக மக்களுக்கு கிடைக்கும் அனைத்தையும் இல்லாமல் ஆக்கி, மீண்டும் இன ரீதியான கலவரம் ஒன்று ஏற்பட வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றனர். என்பதை சகோதர தமிழ் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
துண்டுப் பிரசுரங்களுக்கு உரிமை கோரும் அளவுக்கு நாம் வங்குரோத்து அரசியல் செய்யவில்லை. மிகவும் நேர்மையாக தமிழ், கத்தோலிக்க, முஸ்லிம், சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள அரசியலை தான் செய்துவருகின்றோம்.
தமிழ் மக்களை முஸ்லிம்களிடமிருந்து பிரித்து, அதன் மூலம் தேர்தல் காலங்களில் பொட்டனி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போன்று அரசியலிற்காக வாக்குச் சேர்க்க எடுக்கும் ஒரு அமைப்பாக மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர் அமைப்பு செயற்படுகின்றது என்பது மட்டும் புலனாகின்றது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இர்ஷாத் றஹ்மத்துல்லா
இணைப்பாளர்-ஊடக பிரிவு
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரினது
2012.05.26
இணைப்பாளர்-ஊடக பிரிவு
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரினது
2012.05.26
Geen opmerkingen:
Een reactie posten