தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 april 2012

மகிந்தரைக் காட்டிக் கொடுத்தாரா இராணுவத்தளபதி ஜகத் ஜயசூர்யா ?



குருநாகல் மாவட்டத்தில் நேற்றைய தினம்(24) நடைபெற்ற இராணுவ நிகழ்வொன்றில் கலந்துகொண்ட, இராணுவத் தளபதி ஜகத் ஜயசூர்ய சில தகவல்களை வெளியிட்டுள்ளார். 2009ம் ஆண்டு போர் உக்கிரமாக நடந்துகொண்டு இருந்தவேளை, இலங்கை அதிபர் மகிந்தவுக்கு சொல்லமுடியாத அளவு அழுத்தங்கள் ஏற்பட்டிருந்ததாக ஜகத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். பல சர்வதேச நாடுகளிடம் இருந்து வந்த கடும் அழுத்தங்களால் போரைத் தொடரமுடியுமா என்ற சந்தேகங்கள் எழுந்ததாகவும், அந்தவேளையில் போரைத் தொடர்ந்து நடத்துமாறு மகிந்தரே தமக்கு உத்தரவிட்டதாகவும் அவர் வெளிப்படையாக மேடையில் தெரிவித்துள்ளார். என்ன நடந்தாலும் போரை மட்டும் நிறுத்தவேண்டாம் என மகிந்தர் அப்போது தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் வன்னியில் இருந்தவேளை, தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தர், பல அழுத்தங்கள் இருக்கின்றது ஆனால் போரை தொடர்ந்து நடத்துங்கள் எனக் கூறினார் என ஜகத் ஜயசூர்ய இராணுவச் சிப்பாய்களுக்கு இடையே பேசும்போது கூறியிருக்கிறார். இதனூடாக இராணுவத்தின் மூத்த தளபதிகள் சிலர் போரை ஒரு தற்காலிகமாக நிறுத்தும் நோக்கில் அப்போது இருந்ததும், ஆனால் மகிந்தரே போரைத் தொடருமாறு அவர்களுக்கு கட்டளையிட்டதும் அம்பலமாகியுள்ளது. இதனை இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதி ஜகத் ஜயசூர்ய ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதுபோல ஒப்பித்துள்ளார். இவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மகிந்தரை அப்பட்டமாக காட்டிக்கொடுக்கும் செயலாக உள்ளது !

இதனை ஒரு சட்டபூர்வமான ஆதாரமாக எடுக்க முடியும். எது எவ்வாறு இருப்பினும் ஜகத் ஜயசூர்யா சொல்லும் விடையங்கள் சில, பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது எனலாம். காரணம், அதாவது 2009ம் ஆண்டு போர் நடைபெற்றவேளை ஜகத் ஜயசூர்யா இராணுவத் தளபதியாக இருந்திருக்கவில்லை. சரத்பொன்சேகாவே இராணுவத்தளபதியாக இருந்தார். எனவே போரைத் தொடரும்படி மகிந்தர் சரத்பொன்சேக்கவுக்கே உத்தரவிட்டிருக்கவேண்டும். ஆனால் சரத்பொன்சேகாவை விட அதிகாரத்தில் கீழ் நிலைவகித்த ஜகத் ஜயசூர்யாவிடம் மகிந்தர் ஏன் போரை தொடர்ந்து நடத்துமாறு உத்தவிடவேண்டும் என்ற சந்தேகங்களும் இங்கே எழுகின்றன.

ஜகத் ஜயசூர்யாவின் விசுவாசிகள் அடங்கிய படையணி ஒன்றைவைத்தே மகிந்தர் இறுதி யுத்தத்தில் பல யுத்தக்குற்றங்களை இழைத்துள்ளதாக சில அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை வைத்துப் பார்க்கும்போது, சரத்பொன்சேகா தளபதியாக இருக்கும்போதே அவரை விட, மகிந்தர் ஜகத் ஜயசூர்யாவை ஏதோ ஒரு தேவைக்காகப் பயன்படுத்தியுள்ளார் என்பது வெளிச்சமாகிறது. அது என்ன என்பது தமிழர்களுக்குப் புரியத புதிர் அல்லவே ! காலங்கள் மெல்ல நகர்ந்தாலும் பல உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவர ஆரம்பிக்கின்ற அல்லவா !

Geen opmerkingen:

Een reactie posten