யாழ் கொக்குவில் பகுதியில் யுவதி ஒருவரிடம் பட்டப்பகலில் தாலி அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்தை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இவ்வாறு வீதியில் வைத்துக் குடும்பப் பெண்ணைத் தாக்கிவிட்டுத் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற திருடர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர் என மேலும் அறியப்படுகிறது. கொக்குவில் மேற்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் குளப்பிட்டிச் சந்தியில் உள்ள சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு கொக்குவில் மஞ்சவனப்பதி ஆலயத்திற்குப் பின்புறமாக உள்ள வீதியால் வீடு சென்ற வேளை துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் அப்பெண்ணைத் தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அச் சமயம் அவ் வீதியால் ஓட்டோவில் வந்த இளைஞன் திருடர்களைப் பின்தொடர்ந்து சென்று வேறு சில இளைஞர்களுடைய உதவியுடன் அத் திருடர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர் என அறியப்படுகிறது. மாட்டிக்கொண்ட இதிருடர்களின் புகைப்படங்கள் இதோ !
Geen opmerkingen:
Een reactie posten