நேற்றைய தினம்(02) சென்னை உயர்நீதிமன்றம் , அதிரடி உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. இலங்கையில் சமாதானம் திரும்பி, அங்கே தமிழர்கள் கெளரவத்துடன் வாழும் நிலை மற்றும் இந்திய மீனவர்களுக்கான அச்சுறுத்தல் என்பன முடிவுக்கு வரும்வரை, இந்திய -இலங்கை கிரிகெட் போட்டிகள் அனைத்தும் ரத்துச்செய்யப்படவேண்டும் என அது உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.பாணுமதி மற்றும் பி.ராஜேந்திரன் ஆகியோரே இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இதன் நகல் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறியப்படுகிறது.
இதற்கான பதில் மனுவை தாக்கல் செய்வது(எதிர் மனு) என்றால், வரும் 16ம் திகதிக்கு முன்னதாக அதனை தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றில் வழக்குப் பதிவுசெய்துள்ள வழக்குத் தொடுனர், நடக்கவிருக்கும் இலங்கை -மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கிரிகெட் போட்டியில் இலங்கை வென்றாலோ இல்லையேல் தோற்றுப் போனாலோ, இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களை மூர்க்கமாகத் தாக்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை நீதிபதிகள் கருத்தில் கொண்டுள்ளனர் என அறியப்படுகிறது. இதன் காரணமாகவே இவ்வாறானதொரு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா சமீபத்திய முக்கோண கிரிக்கெட் தொடரில் இலங்கை தோற்கடிக்கப்பட்ட பின்னர் இதேபோல், இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையினரால் சேதமாக்கப்பட்டதையும் வழக்குத்தொடுணர் சுட்டிக்காட்டியுள்ளார். நடக்கவிருக்கும் போட்டிகளில் இலங்கை வென்றால், சுமார் 3 கோடி மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட இருப்பதைச் சுட்டிக்காட்டிய வழக்குத்தொடுனர், இறந்த இந்திய மீனவர்களுக்கு அரசு என்ன கொடுத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten