தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 april 2012

பிரசன்ன டீ சில்வாவின் இன்னும் லண்டனில் தான் உள்ளார் !


புலம்பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை (GTF) பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரை, பிரசன்ன டீ சில்வா ஒரு வரவேற்க்கத்தக்க நபரல்ல என்று அறிவிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சகம் மீது வழக்கு தொடுக்க உலகத் தமிழர் பேரவை முடிவெடுத்து அதற்காக முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந் நிலையில் பிரசன்ன டீ சில்வா லண்டனை விட்டு தப்பியோடி விட்டதாக, பல ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில், பிரசன்ன டீ சில்வா தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருக்கிறார் என அறியப்படுகிறது.

சில ஊடகங்கள் குறிப்பிட்டதுபோல அவர் லண்டனில் இருந்து தப்பிச்செல்லவில்லை. லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக அவர் தற்போது கடமையாற்றி வருகிறார். அவரது பதவிக் காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. அவரை தொடர்ந்து அப்பதவில் வைத்திருப்பதா இல்லை இலங்கைக்கு திருப்பி அழைப்பதா என்பதனை இலங்கை அரசே முடிவெடுக்க வேண்டும் எனவும் மேலும் அறியப்படுகிறது. இந் நிலையில் உலகத் தமிழர் பேரவை பிரித்தானிய அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.

பிரசன்ன டீ சில்வா, இலங்கையில் இராணுவத்தில் பணி புரிந்தவேளை, அவர் படையணி செய்த போர்குற்ற ஆதாரங்களைத் திரட்டியுள்ள உலகத் தமிழர் பேரவை, இதனை சமர்பித்து அவரை பொலிசார் கைதுசெய்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிவருனின்றனர். இந் நிலையில் சில ஊடகங்கள் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட்டு தமிழ் மக்களைக் குழப்பி வருவது வேதனைக்குரிய விடையமாகும்.



http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2221

Geen opmerkingen:

Een reactie posten