தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 april 2012

வரவேற்பு பிரமாதம்: இந்திய அணி வரமுன்பே 700 தமிழர் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன


India help Tamilsஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டபின்னர் அது தமிழர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என பலரும் ஆர்ருடம் கூறினர் ஏன் காங்கிரஸ் கட்சியினை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் சில தமிழ் எம்.பி க்களும் கூட அப்படித்தான் கூறினர்.
ஆனால் நடந்தது , நடக்கின்றது வேறு மாதிரித்தான் சிங்களம் தான் கூறியது போலவே செய்துவருகின்றது. அதாவது இந்தியா, உலக நாடுகள் மீது தமது எதி்ர்ப்பினை காட்டிவருகின்றது சிங்களம். மகாத்மா காந்தி சிலையினை உடைத்தார்கள், தமிழ் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றார்கள், சிங்கள குடியேற்றங்களைச் செய்துவருகின்றார்கள்,ஊடகங்கள் ஊடாக இனவாத கருத்துக்களும், சர்வதேசத்திற்கு எதிரான கருத்துக்களும் பரப்பபட்டன. இதன் மூலம் சிங்கள மக்களை உசுப்பேற்றி அவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வழிவகை செய்தன.
.
இறுதியாக இப்போது இந்திய பாராளுமன்றக் குழு கொழும்பு வருகின்றது. இந்தக் குழுவின் பயணம் காங்கிரஸ் கட்சியின் ஓர் அரசியல் நாடகம்; ஆகையால்தான் தமிழக முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக ஆகியன புறக்கணித்த நிலையில் அந்தக் குழு வருகின்றது. இந்தியக்குழுவின் வருகை இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என காங்கிரஸின் ஊதுகுழல் நாராயணசாமி கூறியுள்ளார். இவர் இந்தக் கருத்தினைக் கூறி சில மணி நேரங்களில்தான் காலியில் தமிழ்க் குடும்பங்களின் 700 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.சுமார் ஒரு கோடி பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இளைஞர்களும் பெண்களும் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
.
சிங்களத்தின் இந்த இனவாத செயலானது தமிழர்களை எப்படி சிங்கள ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளது. இதனைவிட  நேரில் வந்து பார்க்கவேண்டிய விடயம் என்ன இருக்கின்றது?

Geen opmerkingen:

Een reactie posten