தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 april 2012

நீலப்படம் காட்டும் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் !


நீலப்படம் என்றதும் தவறாக நினைக்கவேண்டாம். நீல நிற சீருடைகளைக்கொடுத்து படம் காட்டவுள்ளார் என்பதே அதன் பொருள் !

அனைத்து அரச ஊழியர்களுக்கும் வரும் சித்திரைப்புத்தாண்டிலிருந்து சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை யாழ்மாவட்ட அரச அதிபரும் சுதந்திரக்கட்சி செயற்பாட்டளருமான இமெல்டா சுகுமார் அவர்கள் தீவிரமாக செயற்படுத்திவருகின்றார் என்ற தகவல்கள் மாவட்ட செயலகத்திலிருந்து வெளியாகியுள்ளது. என்ன சாதாரண சீருடைதானே என்று யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம். தமிழர்களின் கலை,கலாச்சாரம், பண்பாடு என்பவற்றை சீர்குலைத்துவரும் சிங்களப்பேரினவாதத்தின் மற்றுமொரு இனவாத நோக்கத்துடனான திட்டமிட்ட செயற்பாடே இந்த சீருடை வழங்கும் திட்டம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதில் சகல அரச ஊழியர்களும் விழிப்புணர்வோடும், பொறுப்புணர்வோடும் செயற்பட வேண்டும் என்பதோடு, அந்த சீருடையின் நிறத்தினைகூட அவர்கள் திட்டமிட்டு மகிந்தரின் சுதந்திரகட்சி நிறத்திலேயே அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு மகிந்தவை தெய்வமாக போற்றும்; அம்மையார் அவர்களே ஆலோசனை வளங்கியதாக அறிய முடிகின்றது. எது எப்படியிருந்தாலும் அண்மையில் இலங்கை தமிழர்கள்மீதும் இலங்கை பேரினவாத அரசின்மீதும் உலகத்தின் பார்வைகள் தீவிரமாக திரும்பியுள்ள நிலையில் மிகவும் திட்டமிட்ட முறையிலும் அவசர அவசரமாகவும் இந்த நீலகலர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதாவது அண்மையில் ஐ.நா வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்ரும் அதற்கு முன்னரும் நிவாரணம் தருவதாகவும்,பணம் தருவதாகவும் பொதுகூட்டம்,பேரணி என்ற பெயரில் அழைத்துசெல்லப்பட்ட மக்கள் அரசாலும்,ஈ.பி.டி.பி ஆயுதக்குழுக்களாலும் வழங்கப்படும் கொடிகளையும், பதாகைகளையும் ஏந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதும் பின்னர் தமிழ்மக்கள் தங்கள் பக்கம் உள்ளார்கள் என்ற செய்தியை பெரியளவில் தமது ஊடகங்களிலும் வெளிப்படுத்துவார்கள். அதன் ஓர் அங்கமாகவே தற்போது அரச ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவிருக்கும் சீருடையும் அமைப்போகின்றது. அதாவது அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டால் ஒரு பேரணியோ,பொதுக்கூட்டத்திற்கோ அவர்கள் அழைத்துசெல்லப்பட்டு பின்னர் அவர்களில் நீல நிறத்தை தமது அரசியலாக்கவே ஆளும்தரப்பு திட்டமிட்டுள்ளது.

மேலும் மே தினத்தினை எதிர்கட்சிகளின் கூட்டமைப்பு யாழில் நடாத்துவதற்கு ஏற்பாடுகளை செய்துவரும் வேளையில் அதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கோடு ஆளுனராலும் அரச அதிபராலும் அரச ஊழியர்களை பகடைக்காய்களாக்கும் நோக்கோடும் இதனை அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள் என நோக்கமுடிகின்றது. புத்தாண்டிலிருந்து அறிமுகப்படுத்தி அடுத்தவாரம் கடும்தொனியில் அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயமாக நீலநிற சீருடையுடனேயே பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் சுற்றுநிருபம் அனுப்புவார்கள். எனவே இதனை அவசரமாக எதிப்பதற்கும், அதனை நிராகரிப்பதற்கும் ஒவொரு அரச ஊழியரும் பொதுஅமைப்புக்களும், ஊடகங்களும் பொறுப்புணர்வோடு இதனை எதிர்க்கவேண்டும் என்பதோடு தமிழ் மக்களின் அரசியல் சக்தியான த.தே.கூட்டமைப்பின் சட்டவாளர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

அதிர்வுக்கு கிடைக்கப்பெற்ற கடிதம்
:

Geen opmerkingen:

Een reactie posten